ஒருவருக்கு சரியான தூக்கம் கிடைக்காவிட்டால், உடல் எடை அதிகரிக்கும். அதற்கு நல்ல தூக்கத்தையும், உடல் எடையையும் குறைக்க உதவும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
எடையைக் குறைக்க இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பின்வருமாறு:
செர்ரி
செர்ரி பழங்களை இரவு நேரத்தில் உட்கொண்டால், அது வயிற்றை நிரப்புவதோடு, இரவு நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
தயிர்
தயிரில் உள்ள புரோட்டீன் வயிற்றை நிரப்பி தூக்கத்தைப் பெற உதவுவதோடு, தூக்கத்தின்போது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.
க்ரீன் டீ
க்ரீன் டீயை இரவு தூங்கும் முன் குடித்தால், அதில் உள்ள உட்பொருட்கள் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்க உதவி புரியும்.
முட்டை
வேக வைத்த முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த முட்டையை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது வயிற்றை நிரப்புவதோடு, நல்ல தூக்கத்தையும் பெற உதவும்.
கிவி
கிவி பழத்தை இரவு தூங்கும் முன் சாப்பிடுவதன் மூலம், இரவு நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவும்.
வாழைப்பழம்
இரவு தூங்கும் முன் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால், அது நல்ல தூக்கத்தைப் பெற உதவுவதோடு, எடை குறையவும் உதவி புரியும்.