அமெரிக்காவின் ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனத்தின் வாயிலாக அதிகப்டியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் அதானி குழுமம், சமீபத்தில் வெளியான அறிக்கை மூலம் செபி தலைவரும் அதானி பங்கு விலை உயர்வு தொடர்பான மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கள் பங்கு விலையில் 2023 ஜனவரி போல் பாதிப்பை எதிர்கொள்ளவில்லை.
இதேவேளையில் அதானி குழுமத்தில் அடுத்தடுத்து பல மாற்றங்கள் சமீபத்தில் நடந்துள்ளது, சில வாரங்களுக்கு முன்பு கௌதம் அதானி விரைவில் ஓய்வு பெறப்போவதாகவும், அடுத்த தலைமுறையினருக்கு அதிகாரத்தைக் கொடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இதேவேளையில் அதானியின் குடும்ப அலுவலகத்திலும் முக்கியமான மாற்றங்கள் கொண்டுவர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவை அனைத்திற்கு மேலாக தற்போது அதானி குழுமத்தில் தனது பங்கு இருப்புகளை குறைக்க முடிவு செய்து அதன் முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 126 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதானி சாம்ராஜ்ஜியத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ப்ரோமோட்டர்-களின் பங்கு இருப்பை சமநிலைப்படுத்தும் நோக்கில், அடுத்த ஒன்பது மாதங்களில் ரூ.30,000 கோடி (கிட்டத்தட்ட 3.6 பில்லியன் டாலர்) மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்யும் பணியில் இறக்கியுள்ளது. பொதுவாக ஒரு நிறுவனத்தின் ப்ரோமோட்டரான அதன் உரிமையாளர்கள் பங்கு இருப்பை அதிகரிக்கும் போது பங்கு விலை உயரும், இதற்கு உதாரணம் சமீபத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸ். இதேவேளையில் ப்ரோமோட்டர் பங்குகளை விற்பனை செய்தால் பங்கு விலை குறையும். தற்போது அதானி குழுமத்தில் இது தான் நடக்கப்போகிறது, அதேவேளையில் அதானி குழுமம் விற்பனை செய்யும் பங்குகள் பெரிய முதலீட்டாளர்களோ அல்லது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனமோ வாங்கினால் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்து பங்கு விலை உயர்வும்.
அதானி குழுமம் அடுத்த 9 மாதத்தில் சில பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பங்குகளைக் குறைத்து, மற்றவற்றில் அதிகரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர் குழு அனைத்து அதானி நிறுவனங்களிலும் முழுவதும் 64-68% பங்கை வைத்திருக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் தற்போது அம்புஜா சிமெண்ட் மற்றும் அதானி பவர் ஆகியவற்றில் பங்கு விற்பனை தொடங்கும், அதே சமயம் அதானி கிரீன் எலெக்ட்ரிக் எனெர்ஜியில் பங்குகளைச் சந்தையில் இருந்து வாங்கி தனது இருப்பை அதிகரிக்கப்படும். அதானி குழுமம் வெள்ளிக்கிழமை (இன்று) பிளாக் டீல் மூலம் நடைபெறக்கூடிய $500 மில்லியன் மதிப்புள்ள அம்புஜா சிமெண்ட்ஸில் 2.8% பங்கை விற்பனை செய்து இந்த நடவடிக்கையைத் தொடங்குகின்றனர். இதற்குப் பிறகு, அடுத்த சில மாதங்களில் சிமெண்ட் நிறுவனத்தில் இதே அளவிலான மற்றொரு பிளாக் டீல் நடைபெறலாம் என்று அந்த நபர்கள் கூறினர். அதானி குடும்பம், ஆண்டு முடிவுக்குள் அதானி பவரின் சுமார் 3% பங்கை விற்பனை செய்யும் திட்டத்தில் உள்ளது, இந்த விற்பனையிலிருந்து ரூ. 8,000-10,000 கோடி திரட்ட முடியும். அதானி கிரீன் எனர்ஜியில் தங்கள் பங்கை அதிகரிக்க கௌதம் அதானி தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது இதில் 57.5% பங்கை வைத்திருக்கும் ப்ரோமோட்டர் குழு அடுத்த சில வாரங்களில் அதன் அளவை 3% அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் அதானி வில்மர், இந்த மாதம் பங்குதாரர் பங்கை 87.87% லிருந்து 75% ஆக குறைக்க முயற்சிக்கும், ஏனெனில் பங்குச்சந்தை வர்த்தக விதிமுறைகள் இணங்க வேண்டியது கட்டாயப்படுத்தியுள்ளது செபி. நிறுவனங்கள் குறைந்தபட்சம் 25% பொது சந்தையில் வைத்திருக்க வேண்டும். அதானி மற்றும் வில்மர் ஆகியவை இந்நிறுவனத்தில் தலா 43.94% பங்கை வைத்துள்ளன.