PF இருப்பு தொகை பற்றி தெரிந்துகொள்ள இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள்..!

இனி உங்களது PF இருப்பு தொகை விவரம் அறிய இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள்!!

நம் நாட்டில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி(EPF) ஒரு சிறந்த ஓய்வூதிய திட்டமாக இருக்கிறது.அரசுத் துறை மட்டுமல்ல பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை வழங்குகிறன.

ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகை அவர்களது PF கணக்கில் சேமிப்பு கணக்கில் சேர்க்கிறது.இதை ஊழியர்கள் தாங்கள் விரும்பும்போது எடுத்துக் கொள்ள முடியும்.

அதேபோல் PF பணம் எடுக்கப்படாத பட்சத்தில் அவை ஓய்வுக்கு பின்னர் முழுமையாக உங்கள் கைக்கு வந்து சேரும்.மருத்துவ செலவு,குழந்தைகளின் கல்வி,வீடு கட்டுமானம்,திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு இடையில் பணம் தேவைப்படுகிறது என்ற பட்சத்தில் அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றி ரூ.1,00,000 லட்சம் வரை பெற்றுக் கொள்ள முடியும்.

ரூ.50,000க்கு கீழ் PF பணம் எடுக்க உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் உடனடி அப்ரூவல் கிடைத்து பணம் பெற்றுக் கொள்ள முடியும்.அதேபோல் 2 அல்லது 3 நாட்களில் ரூ.1,00,000 வரை முன்பணம் எடுக்கும் நடைமுறையும் உள்ளது.

PF இருப்புத் தொகை விவரம் அறிவது எப்படி?

உங்கள் PF கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறித்து அறிய பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து 01122901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.இவ்வாறு செய்த உடனே உங்கள் எண்ணிற்கு SMS வாயிலாக PF இருப்பு குறித்த விவரம் வந்துவிடும்.

ஆன்லைலில் PF பணம் எடுப்பது எப்படி?

UMANG என்ற செயலிக்குள் சென்று உங்கள் PF தொடர்பான விவரங்களை பதிவு செய்யவும்.

பின்னர் EPFக்கு சென்று “பணியாளர் மையம்”என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.அதன் பின்னர் ரெய்ஸ் கிளைம் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து UAN எண்ணை பதிவிடவும்.

பின்னர் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP எண்ணை பதிவு செய்து சமர்ப்பிக்கவும்.இவ்வாறு செய்த அடுத்த 15 நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கிற்கு PF பணம் வந்துவிடும்.