இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்துபவர்கள் சில முக்கிய தேவைகளுக்காக ஜிமெயில் பயன்படுத்துகிறார்கள்.
ஜிமெயில் பயன்படுத்திவிட்டு முறையாக வெளியேறவில்லை என்றால் அது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
இதனால் அதை கண்டுபிடித்து வெளியேறுவது அவசியம். Google account பக்கம் சென்று இடது புறத்தில் உள்ள security என்பதை அழுத்தியதும் திறக்கும் பக்கத்தில் your divice என்ற பிரிவில் Gmail எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பது காட்டும். அதைப் பார்த்து தேவையில்லாத மொபைல் மற்றும் கணினிகளில் இருந்து வெளியேறலாம்.