நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். மேலும், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையானவராக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு. திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.
நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ ‘சின்ன சின்ன கண்கள்’ `ஸ்பார்க்’ வெளியாகி வைரலானது.
‘கோட்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. திரைப்படம் ஒரு பக்கா ஆக்சன் திரைப்படமாக அமைந்துள்ளது. டிரெய்லரில் இடம் பெற்ற வசனங்கள் மிகவும் அசத்தலாக உள்ளது. விஜயின் மகனாக வரும் இளைய விஜய் கதாப்பாத்திரம் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. டிரெய்லரின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘கோட்’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.