கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் கூகுள் லென்ஸ் ஆப் உலகம் முழுவதும் ஏராளமானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நமக்கு ஒரு பொருளின் பெயர் தெரியவில்லை அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதை போட்டோ எடுத்து இந்த கூகுள் லென்ஸ் ஆப்பில் அப்லோடு செய்தால் அதைப் பற்றி முழு விவரத்தையும் கூகுளின் உதவியுடன் வழங்கிவிடும். உதாரணமாக ஒரு துணி பொருள் எலக்ட்ரானிக் சாதனம் வாங்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ஆனால் அதைப் பற்றி எதுவும் தெரியாது என்றால் அந்த துணி பொருளின் படத்தை கூகுள் லென்ஸில் அப்லோடு செய்து தேடினால் அதைப் பற்றிய முழு விவரம் கிடைக்கும்.
இவ்வாறு இருக்கையில் நிறுவனம் ஒரு படிக்கு மேலாக சென்று மருத்துவ ஆலோசகராக மாறியுள்ளது. அதாவது கூகுள் லென்ஸில் உங்க சரும பிரச்சனை தொடர்பாக போட்டோ அப்லோடு செய்தால் அது குறித்து கூகுள் விளக்குகிறது. எனினும் இது முறையான மருத்துவ பரிசோதனையாக பார்க்க முடியாது.
உங்கள் சருமத்தில் உள்ள மச்சம், கை வீக்கம், கொப்பலம், அரிப்பு உள்ளிட்ட சரும நிலைகளை கண்டறியும் திறன் கொண்டது.
கூகுள் சர்ச் பார் பக்கம் சென்று அருகில் உள்ள கூகுள் லென்ஸ் பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து உங்கள் சரும புகைப்படத்தை அப்லோடு செய்யவும். பிரச்சனை குறித்து செயலி கேள்விகள் கேட்கும். இதை கொடுப்பதன் மூலம் உங்கள் சரும பாதிப்புகளுக்கு செயலி விளக்கம் அளிக்கும். என்ன காரணம், என்ன செய்ய வேண்டும், மருத்துவ ஆலோசனை ஆகியவற்றை குறித்து தெரிவிக்கும். இந்த அம்சம் தங்கள் சருமம் பற்றி கவலை கொள்ளும் பயனர்களுக்கு உதவியாகும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.