சித்தமருத்துவம் படித்தவர்களுக்கு அரசாங்கத்தில் வேலை!

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் (ஆயுஷ்), மருந்து வழங்குநர் (ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதா), பல்நோக்கு பணியாளர்கள், (ஆயுர்வேதா, ஹோமியோபதி, சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஆகிய பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியிட விவரங்கள்

பதவியின் பெயர்

காலியிடங்கள்

மருத்துவ அலுவலர் (Ayush)

2

மருந்து வழங்குநர் (Dispenser)

4

பல்நோக்கு பணியாளர் (Multipurpose Worker)

6

கல்வி தகுதி மற்றும் சம்பளம்

மருத்துவ அலுவலர் (Ayush) பணிக்கு

தேவையான கல்வி தகுதி : Bachelor of Siddha Medicine and Surgery (or) M.D. (Siddha)

ரூ.34,000

மருந்து வழங்குநர் (Dispenser)

தேவையான கல்வி தகுதி : Bachelor of Homeopathy Medicine and Surgery

தினக்கூலி ரூ.750

பல்நோக்கு பணியாளர் (Multipurpose Worker)

தேவையான கல்வி தகுதி : 8th Pass to 10th Fail

தினக்கூலி ரூ.300

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவம் புதுக்கோட்டை மாவட்ட வலைதளம் https://pudukkottai.nic.in இணையதள பக்கத்தில் இருக்கிறது. வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதனை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் புதுக்கோட்டை சித்த மருத்துவ அலுவலகத்தில் 18.07.2024 பாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முகவரி
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்,
மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம்,
பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம்,
புதுக்கோட்டை 622 001.
தொலைபேசி என் 04322-220409