‘கிராம நத்தம் பட்டா’ இப்ப ரொம்ப ஈஸியா வாங்கிடலாம்!

நத்தம் நில வகைப்பாடு மாற்றங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.. அத்துடன், இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.

பொதுமக்களின் நன்மைகளையும், வசதிகளையும் கருத்தில்கொண்டு, தமிழக அரசு பல்வேறு அதிரடிகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, நிலம் தொடா்பான பல்வேறு தேவைகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, நில ஆவணங்கள், பட்டா மாறுதல் உத்தரவுகள் போன்றவற்றை பெறுவதற்காகவே ஆன்லைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சபாஷ் தமிழக அரசு: இதன்ஒருபகுதியாக, நத்தம் நில ஆவணங்களையும், ஆன்லைனில் கொண்டுவரப்பட்டுள்ளது.. நத்தம் நிலங்களுக்கு விரைவில் இணையவழி பட்டா மாறுதல் முறை கொண்டுவரப்படும் என்று முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் உறுதி தந்திருந்தார்.

அதன்படியே, இந்த இணையதள வசதியை நம்முடைய முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் துவக்கி வைத்திருந்தார்.. நத்தம் வீட்டுமனைக்கு பட்டா வாங்குவதில் நிறைய சிரமங்களை கிராமப்புற மக்கள் சந்தித்து வந்ததால், இப்படியொரு வசதியை முதல்வர் துவக்கி வைத்திருக்கிறார்கள்.

அதன்படி, நத்தம் நிலங்களில் பட்டா மாறுதல் செய்யவேண்டும் என்றாலோ அல்லது உட்பிரிவு செய்ய வேண்டும் என்றாலோ, அனைத்தையுமே ஆன்லைனில விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனால், நத்தம் அ-பதிவேடு, சிட்டா, புல வரைப்படங்களை ஆன்லைனிலேயே டவுன்லோடு செய்து கொள்ளமுடியும்.. பட்டா, பத்திரங்களின் அடிப்படையில், உரிமைகளை எளிதாக பெற முடியும்.

இதற்கு www.eservices.tn.gov.in. என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்க சென்று, உரிய ஆவணங்கள், உரிய சான்றுகளை சமர்ப்பித்து, விண்ணப்பிக்க வேண்டும்… இதற்கு குறைந்த கட்டணமும் செலுத்த வேண்டும்.. இதற்கு பிறகு விண்ணப்ப ஐடி ஒன்று பிரத்யேகமாக உங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிடும்.

இந்த வசதியை ஏற்படுத்தி தர இன்னொரு காரணமும் உண்டு.. நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட அளவு நிலங்கள் நத்தம் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.. இந்த நிலங்கள் ஏழை மக்கள் குடியிருக்கவும், விவசாயம் செய்யவும் ஒதுக்கப்பட்டு வந்தன..

ஆனால், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் மட்டும், இதை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, இந்த நிலங்களை விற்க முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் நிறைந்திருந்ததால், நிறைய சிக்கல்கள் எழுந்தன.. அதனால்தான், நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, அரசே நேரடியாக செயல்படுத்தி வருகிறது…

இப்போது விஷயம் என்னவென்றால், வழக்கமான நிலங்களின் பட்டா உள்ளிட்ட விபரங்களை பெறுவது போலபோன்று, நத்தம் நில விபரங்களையும் ஆன்லைனில் பார்க்க வசதி உள்ளதால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதாம்.

தனியார் கட்டுப்பாட்டில் உள்ள நத்தம் நிலங்களை, ‘ரயத்துவாரி’ என்றும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நத்தம் நிலங்களை, ‘சர்கார்’ என்றும் பொதுவான பெயரில் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டதுடன், இதற்கான அரசாணையும், கடந்த ஆண்டு மே மாதம் பிறப்பிக்கப்பட்டதும் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறதாம்.

எனினும், பொதுமக்களிடம் இதுகுறித்து கூடுதலான விழிப்புணர்வுயை ஏற்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும் என்கிறார்களாம் வருவாய்த்துறை அதிகாரிகள்.. அதேபோல, சொத்து பரிமாற்ற பத்திரங்களை எழுதினால்தர்ன, புதிய பட்டா, அடங்கல் ஆவணங்களில் தெளிவாக குறிப்பிட வாய்ப்பு ஏற்படும் என்பதால், இதுதொடர்பாக வருவாய் துறையினர் பொது மக்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.