தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது முடிவடைய உள்ள நிலையில் புதுச்சேரி பள்ளிகளுக்கு ஜூன் 12ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அதன் காரணமாக கோடை விடுமுறையை நீட்டிக்க கோரி பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.