லியோவில் இணைந்த ஹாலிவுட் நடிகர்!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘லியோ’. இது அக்டோபர் மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
பூஜை விடுமுறையை மையமாக வைத்து சுமார் ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனை குறிவைத்து பெரும் வசூலை குவிக்க பட குழு திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் ‘லியோ’ திரைப்படத்திற்கான பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த பாடலில் சுமார் 2000 பேர் பங்கேற்று நடனமாடுகின்றனர். இந்த நிலையில் பாடல் படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘லியோ’ பட குழு ஹைதராபாத் செல்லும் பொழுது அங்கு அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம் செட்டில் கிளைமாக்ஸ் காட்சிகள் நடக்க இருக்கிறது. முழு திரைப்படம் ஜூன் மாதம் இறுதிக்குள் ஷூட்டிங் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படம் தொடர்பான ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் ‘டென்சில் ஸ்மித்’ – ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறாராம்.

ஏற்கனவே நான்கு நாட்கள் படப்பிடிப்பு காட்சிகள் முடிந்து விட்டதாம். இவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனட்’ திரைப்படத்திலும் டென்சில் நடித்துள்ளார். ‘டெனட்’ படத்தில் நடித்த நடிகரை லியோவின் லோகேஷ் கனகராஜ் சேர்த்திருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே பெரிய பட்டாளங்கள் உள்ள நிலையில் ஹாலிவுட் நடிகரை எல்லாம் சேர்த்திருப்பதால் அப்படி என்னதான் கதையை லோகேஷ் கனகராஜ் எடுக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.