தகுதி பெற்ற ஊழியர்களுக்கு எம்பிளாயிஸ் பிராவிடன்ட் ஃபண்ட் நிறுவனம் வழங்கும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் என்றால் என்ன, அதனை ஆக்டிவேட் செய்வதன் அவசியம் என்ன மற்றும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை ஆன்லைனில் ஆக்டிவேட் செய்வது எப்படி போன்ற அனைத்தையும் இந்த பதிவில் விளக்கமாக தெரிந்து கொள்வோம்.
PF என்று அழைக்கப்படும் எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) என்பது ஒழுங்கமைக்கப்பட்ட துறைசார்ந்த ஊழியர்களுக்காக அரசு உருவாக்கியுள்ள ஓய்வு கால சேமிப்பு திட்டம் ஆகும். இந்தத் திட்டமானது எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் அடிப்படை சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி சேமிப்பாக வைக்கப்படுகிறது.UAN என்றால் என்ன?யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் என்று அழைக்கப்படும் UAN என்பது என்ற 12 இலக்க எண்ணானது அனைத்து தகுதி பெற்ற ஊழியர்களுக்கும் எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனத்தால் (EPFO) வழங்கப்படுகிறது. இதில் வெவ்வேறு நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு வழங்கிய பல்வேறு மெம்பர் IDகள் போன்ற விவரங்கள் இருக்கும்.யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை ஆக்டிவேட் செய்வதன் அவசியம் என்ன?ஒரு ஊழியர் சேவை துறையில் முதல்முறையாக சேரும்பொழுது அவருடைய நிறுவனம் அவருக்காக யூனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை உருவாக்குவார். எனினும் இந்த நம்பரை உருவாக்கிய பிறகு ஊழியர் அதனை அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்வையிடுவதன் மூலமாக ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதுவரை அந்த எண் இன்ஆக்டிவாக இருக்கும்.EPF மெம்பர் இ-சேவா போர்ட்டல் மூலமாக UAN ஆக்டிவேட் செய்வது எப்படி?யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை ஆன்லைனில் ஆக்டிவேட் அல்லது பதிவு செய்ய பின்வரும் படிகளை பின்பற்றவும்:: விவசாயிகளுக்கு 17வது தவணை நிதி எப்போது கிடைக்கும்? பிஎம் கிசான் குறித்த அப்டேட்!unifiedportal-mem.epfundia.gov.in என்ற EPFO மெம்பர் போர்ட்டலை அணுகவும்.
இப்போது டேஷ் போர்டில் ‘Important Links’ என்ற டாபின் கீழ் உள்ள ‘Activate UAN’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
UAN அல்லது மெம்பர் ID, ஆதார் நம்பர், பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர் மற்றும் கேப்சா கோட் போன்ற விவரங்களை என்டர் செய்து ‘Get Authorization PIN’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆத்தரைசேஷன் PIN நம்பரை என்டர் செய்து ‘Validate OTP and Activate UAN’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
உங்களுடைய UAN ஆக்டிவேட் ஆகி அதற்கான பாஸ்வோர்ட் உங்களுடைய மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இப்போது உங்களால் தங்களது UAN மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி EPF அக்கவுண்டில் லாகின் செய்ய முடியும்.
இந்த வழிமுறைகளை பின்பற்றி உங்களுடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் எளிதாக ஆக்டிவேட் செய்து பயன்படுத்தலாம்.