இந்தியாவில் கேஸ் சிலிண்டர் என்பது மக்கள் மத்தியில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஒருஸ் கடந்த மார்ச் மாதம் முதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இருந்தாலும் இதனை இன்னும் எளிமையாக வாங்க மத்திய அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி 450 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஒரு சில மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறையில் இருந்தாலும் இந்தியாவில் உள்ள அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு சில வழிமுறைகளை வெளியேற்றுள்ளது. அதை பின்பற்றி பயனடையலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஜன் ஆதாரை எல்பிஜி ஐடியுடன் இணைக்க வேண்டும். இந்த இணைப்பை மேற்கொள்ள அருகில் உள்ள ரேஷன் கடைகளை அணுகவும்.
பிறகு இகேஒய்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அடையாள சரிபார்ப்பு பணிகளில் ஏதாவது பிழை இருந்தால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும்.
இந்த இரண்டு பணிகளும் சரியாக முடிந்த பிறகு ஜன் ஆதாருடன் இணைக்கப்பட்ட எல்பிஜி ஐடி புதிதாக கிடைத்துவிடும். பின்னர் நீங்கள் எளிதாக 450 ரூபாய்க்கு சிலிண்டர் பெறலாம்.