தோல் அலர்ஜி நீங்க… வீட்டு வைத்தியம்!

இரசாயனம் கலந்த பொருட்களை தேகத்திற்கு பயன்படுத்துவதால் தோல் அரிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த தோல் அலர்ஜி பாதிப்பு நீங்க வீட்டில் இயற்கை பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

தேவைப்படும் பொருட்கள்:

1)வேப்பிலை
2)கருவேப்பிலை
3)முருங்கை கீரை
4)குப்பைமேனி
5)மஞ்சள் தூள்

ஒரு கிண்ணத்தில் வேப்பிலை, கருவேப்பிலை, முருங்கை கீரை மற்றும் குப்பைமேனி இலைகளை சம அளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி அலசவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இந்த இலைகளை போட்டு மைய்ய அரைத்து கொள்ளவும். அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் தோல் அலர்ஜி குணமாகும்.

1)தேங்காய் எண்ணெய்
2)எலுமிச்சை சாறு

ஒரு கிண்ணத்தில் 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த எண்ணெயை தோல் மீது பூசி வர தோல் அலர்ஜி, அரிப்பு உள்ளிட்ட அனைத்து வியாதிகளும் நீங்கும்.

1)சீமை அகத்தி இலை
2)கஸ்தூரி மஞ்சள்

ஒரு கிண்ணம் அளவு சீமை அகத்தி இலை எடுத்துக் கொள்ளவும். இதை தண்ணீரில் அலசி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அதில் 1 துண்டு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் தோல் தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.