வீட்டிலேயே ஊட்டி சாக்லேட் செய்வது எப்படி?

நீலகிரியில் குடியேற்றிய ஆங்கிலேயர்கள் தங்களது வீடுகளிலேயே சாக்லேட்களை தயாரிக்க ஆரம்பித்தனர். இதற்கு அங்கு நிலவும் சீதோஷன நிலை முக்கிய காரணமாக விளங்குகிறது. கொக்கொ, வெண்ண்யெ கலந்த சாக்லேட் பார்களை சுமார் 40 டிகிரி வெப்பத்தில் உருக்கி நமக்கு தேவையான பொருட்களை சேர்த்தோ அல்லது தனியாகவோ இயற்கையாக குளிர வைத்தாலே ஹோம்மேட் சாக்லேட் தயார். இப்போது நம் அனைவரது வீடுகளிலும் ஃப்ரிட்ஜ் உள்ளதால் இதனை தயாரிப்பது எளிதாக உள்ளது.

ஹோம்மேட் ஊட்டி சாக்லேட் செய்ய தேவையான பொருட்கள்
கொக்கோ பவுடர் – அரை கப்
அரைத்த சர்க்கரை – அரை கப்
பால்பவுடர் – 2 முதல் 3 டீஸ்பூன்கள்
பால் பவுடர் கிடைக்கவில்லை என்றால் கால் டம்பளர் பால் இருந்தால் போதும்
தேங்காய் எண்ணெய், வெண்ணெய், பாதம், பிஸ்தா, முந்திரி தேவையனா அளவு

செய்முறை:-
அரைத்த கொக்கோ பவுடர் சலித்த சர்க்கரையை சேர்க்கவும். இதில் பால் பவுடரை சேர்த்து நன்றாக கலக்கவும். பால் ஊற்றி கிளறுபவர்கள் சிறிது சிறிதாக பால் ஊற்றி கிளறுவது அவசியம். ஒரு பாத்திரத்தில் அரை டம்பளர் அளவுக்கு தண்ணீரை ஆவி வரும் வரை கொதிக்க வைக்கவும். அதன் மேல் ஒரு தட்டை போட்டு மூடவும். அந்த பாத்திரம் ஆவியில் நன்றாக சூடாக வேண்டும். அதில் வெண்ணெய் ஊற்றவும். வெண்ணெய் சூடான பிறகு தயாராக வைத்திருந்த பவுடரை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

ஓரளவு கெட்டி பதம் வந்து, ஆறிய பின்னர் பாதம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட உலர் பழங்களை நன்றாக சேர்த்து நன்றாக கிளறவும்.
ஐஸ் ட்ரே ஒன்றில் வெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி தேய்த்து அதில் இந்த கலவரை ஊற்றி ஃபிரீசரில் வைக்கவும். நன்கு கெட்டியான உடன் இதனை சாப்பிடலாம்.