JEE Advance Examல் ஹைதராபாத் மாணவன் முதலிடம்!

IIT சேர்க்கைக்கு தகுதி பெறுவதற்கான JEE Advance தேர்வு முடிவுகளை ஐஐடி கவுகாத்தி இன்று வெளியிட்டது. IIT ஹைதராபாத் மண்டலத்தில் இருந்து விண்ணப்பித்த Vavilala Chidvilas Reddy என்பவர் 341 மதிப்பெண்களுடன் (100% மதிப்பெண்கள்) நாட்டின் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். பெண்கள் வரிசையில் Nayakanti Naga Bhavya Sree என்பவர் 298 மதிப்பெண்களுடன் முதல் நபராக தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

IIT சென்னை, மும்பை போன்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் உள்ள இளநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை JEE அட்வான்ஸ் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. JEE முதன்மைத் தேர்வு (JEE Mains) மதிப்பெண் தரவரிசைப் பட்டியலில் முதல் 2.50 லட்சம் மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு தகுதியுடையவராக கொள்ளப்படுகின்றனர்.

2023-24 கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி நடைபெற்றது. 2.5 லட்சம் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெறும் 1,89,744 லட்சம் மாணவர்கள் மட்டுமே IIT சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களில் 1,80,226 பேர் மட்டுமே இரண்டு தாள்களையும் எழுதினர். IITகளில் உள்ள 16,598 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

www.jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரரின் பதிவு எண், பிறந்த தேதி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.