பாம்பு வருவதுபோல் கனவு கண்டால்… அதற்கு என்ன அர்த்தம்..!

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கனவு வருவது இயல்பு. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். நம்மில் பலருக்கு பாம்பு குறித்த கனவு வந்திருக்கும். ஆனால், அதற்கு அர்த்தம் என்ன என்பது பலருக்கு தெரிந்திருக்காது. பாம்புகளைப் பார்த்து தூக்கத்தில் திடுக்கிடுபவர்கள் ஏராளம். ஆனால் பாம்பை கண்டால் என்ன நடக்கும் தெரியுமா? இதுகுறித்து கனவு நிபுணர் லோரி க்வின் லோவன்பெர்க் கூறுகையில், பாம்பு கனவுகளை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. இந்த கனவு சில முக்கியமான விஷயங்களை நம்மிடம் சொல்ல முயற்சிக்கிறது. கனவில் ஒரு பாம்பைப் பார்ப்பது ஒரு எச்சரிக்கை. இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆபத்தை குறிக்கிறது. இது நம்பிக்கையை உடைக்கலாம் அல்லது வாழ்க்கையில் ஒரு கடினமான காலகட்டத்தின் ஆரம்பமாக இருக்கலாம்.

கனவில் காணப்படும் பல்வேறு வகையான பாம்புகள் கூட வெவ்வேறு சமிக்ஞைகளை கொடுக்க முடியும். விஷமில்லாத பாம்பை ஒருவர் கனவில் கண்டால், அவரது வாழ்க்கையில் யாரோ ஒருவர் தீங்கு விளைவித்தார் என்று அர்த்தம. ஆனால் இப்போது அவர் இல்லை. ஒரு கனவில் ஒரு பாம்பைப் பார்ப்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு விஷமுள்ள நபர் இருப்பதைக் குறிக்கிறது. படமெடுக்கும் பாம்பை பார்ப்பது நிதி இழப்புக்கு வழிவகுக்கும்.வீட்டிற்குள் பாம்பை கண்டால் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். கனவில் பாம்பு கடித்தால் உடல் நலக்குறைவு ஏற்படும்.
கனவில் பாம்பு உங்களை விரட்டினால் வறுமை ஏற்படப்போகிறது என்று அர்த்தம். எனவே, இதை சுலபமாக எடுக்க வேண்டாம். அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும். அதுவே, ஒரு பாம்பு உங்கள் காலைச்சுற்றி பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பகவான் பிடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது.

ஒரு பாம்பு உங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டு, எதுவும் செய்யாமல் அமைதியாக வெளியே செல்வதை போல நீங்கள் கனவு கண்டால், நீங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை விரைவில் செலுத்த வேண்டும் என்பது பொருள். இதுவே, அந்த பாம்பு உங்களின் தலைக்கு மேல் குடை பிடிப்பது போல நின்றால், தெய்வத்தின் அனுசரணை மற்றும் பார்வை உங்கள் குடும்பத்தின் மீது உள்ளது என கருதப்படுகிறது.
பாம்பு யார் மீதாவது ஏறிச்செல்வது போல கனவு வந்தால், அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் போகிறதென்று அர்த்தம். அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

உங்கள் கனவில் நீங்கள் ஒரு பாம்பை கொன்றாலோ அல்லது பாம்பு இறந்து கிடப்பதை கண்டாலோ உங்களுக்கு வர இருக்கும் ஆபத்து விலகிவிட்டது என அர்த்தம். இருப்பினும் அனைத்து விஷயத்திலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. உங்களுக்கு ஏற்பட்டிருந்த வியாதி குணமாகும் என்றும் பொருள்படும்.