எந்த உணவுகளுடன் கருவாட்டை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு விஷமாகும்!

பொதுவாகவே ஒரு சில உணவுகளுடன் ஒரு சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அது உடலிற்கு தீங்கு ஏற்பட வழிவகுக்கும். மரவள்ளிக்கிழங்கை மூடி சமைக்கக் கூடாது என நம் முன்னோர்கள் சொல்வது வழக்கம். காரணம் என்னவென்றால் அது நச்சு தன்மையாக மாறிவிடும் என்பதே. அதுப்போலவே ஒரு சில உணவுகளை சேர்த்து எடுத்துக்கொள்வதால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் கருவாட்டை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். கருவாட்டில் உயர் தரம் கொண்ட புரதச்சத்து இருக்கிறது. குறிப்பாக கருவாட்டில் 80 முதல் 85 சதவீதம் வரையில் புரதம் மட்டுமே இருக்கிறது. கருவாட்டில் உள்ள அமினோ அமிலங்கள் என்பது முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களுக்கு சமமானது.