போஸ்ட் ஆபிஸில் மாதம் ரூபாய் 1000 செலுத்தி வந்தால் உங்க லைஃப்பே மாறிடும்..!

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் அனைத்துக்குமே மத்திய அரசின் உத்தரவாதம் உண்டு. இதனால் மூத்த குடிமக்கள், முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற பாதுகாப்பையும் உத்தரவாதமான மாத வருவாயையும் இந்த திட்டங்கள் வழங்குகின்றன.உங்களுக்குப் பணம் தேவையென்றால் அதற்கு நிச்சயம் முதலீடு செய்திருக்க வேண்டும்.
மிகப் பெரிய தொகையாகத் தான் முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டிருந்ததால் இன்னும் முதலீடு செய்யாமல் இருந்தீர்கள் என்றால் அது முற்றிலும் தவறான கண்ணோட்டமாகும்.உங்களது வருமானத்துக்கு ஏற்ப நீங்கள் முதலீட்டை தொடங்கி விடலாம். ஏனென்றால் உங்களது முதலீடானது உங்களது பணத்தை பெருக்கி விடும். உங்கள் பணத்தை சேமித்து பத்திரமாக வைத்திருந்தால் அந்தப் பணம் ஏதாவது ஒரு வழியில் செலவாகிவிடும்.இந்திய போஸ்ட் ஆபிஸ்களில் பல வகையான சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. ரூ.500க்கும் குறைவாக முதலீடு செய்து சிறந்த நன்மைகளை இந்தத் திட்டங்களின் மூலம் நீங்கள் பெறலாம்.
ஒரு சிறிய தொகையில் ஆரம்பித்து பின்னர் படிப்படியாக உங்களது வருமானத்துக்கு ஏற்றபடி முதலீட்டை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம். இப்படித்தான் கையில் காசை சேர்க்க முடியும்.ரூ.500க்கும் குறைவாக முதலீடு செய்து பணம் சேமிக்கும் வழிமுறைகள் பற்றி இனி பார்க்கலாம். பிபிஎப்- பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் என்பது ஒரு நீண்டகால சேமிப்பு திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் குறைந்தது ரூ.500, அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை ஆண்டுதோறும் முதலீடு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டைச் செய்யலாம்.
இந்தத் திட்டம் முதிர்ச்சி அடையும் போது பணத்தைத் திரும்பப் பெறலாம் அல்லது அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கலாம். நீங்கள் மாதம் ரூ.500ஐ இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் அது ஆண்டுக்கு ரூ.6000 ஆகும். இப்போது பிபிஎப் திட்டத்துக்கு 7.1 சதவீதம் ஆண்டு வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. அப்படியென்றால் மாதம் ரூ.500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் அது ரூ.1,62,728 ஆகும். இதை மேலும் 5.5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டியுடன் அது ரூ.2,66,332 ஆக உயரும். இதை 20 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் மொத்தம் 25 ஆண்டுகளில் ரூ.4,12,321 ஆகும்.சுகன்யா சம்ரித்தி யோஜனா எஸ்எஸ்ஒய்- உங்களது மகள் பெயரில் சுகன்யா சம்ரித்தி யோஜனா சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்சம் ரூ.250, அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வருடத்துக்கு முதலீடு செய்யலாம். இப்போது இந்தத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.நீங்கள் இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு தொகை 21 ஆண்டுகள் கழித்து முதிர்ச்சி அடையும். இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் ரூ.90,000 மற்றும் 8.2 சதவீத வட்டித் தொகையும் சேர்ந்திருக்கும். 21 வருடங்கள் கழித்து ரூ.2,77,103ஐ நீங்கள் பெறலாம். போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட்: போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் என்பது ஒரு உண்டியல் போல மாதாமாதம் குறிப்பிட்ட பணத்தை சேமிக்கலாம்.
இந்தத் திட்டம் சிறிய முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்பட்டது. அவர்களது எதிர்காலத் தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.முதலீட்டை ரூ.100ல் இருந்து தொடங்கலாம். முதலீட்டை தொடங்கிவிட்டால் நீங்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்இப்போது இந்தத் திட்டத்துக்கு 6.7 சதவீதம் வட்டி விகிதம் தரப்படுகிறது.நீங்கள் மாதாமாதம் ரூ.500ஐ இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் நீங்கள் 5 வருடங்கள் கழித்து ரூ.30,000 பெறுவீர்கள். 5 வருடங்கள் கழித்து நீங்கள் ரூ.35,681 பெறலாம். இதில் ரூ.5,681 வட்டித் தொகை ஆகும்.