ஆடி வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் பல மடங்கு பெருகும்!

ஆடி மாத அம்மன் வழிபாட்டினை பற்றி பேசுவதற்கு இந்த ஒரு பதிவு போதாது. எண்ணில் அடங்காத வழிபாட்டு முறைகளும் பூஜைகளும் இந்த ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்குள் அடக்கம். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப்போவது ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு எந்த நேரத்தில் சென்று வந்தால் வரங்களை எல்லாம் சுலபமாக பெற முடியும் என்பதை பற்றித்தான். கடன் பிரச்சனை தீர, வருமானம் அதிகரிக்க, தொழிலில் மேலும் மேலும் லாபம் சம்பாதிக்க, நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழ, குடும்பத்தில் அஷ்ட ஐஸ்வரியமும் நிலையாக தங்க சுபகாரிய தடை விலக ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு எந்த நேரத்தில் செல்ல வேண்டும். ஒட்டுமொத்த நன்மையையும் நமக்கு தரக்கூடிய ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் நீங்கள் அம்மன் கோவிலில் இருந்து அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். பொதுவாகவே வெள்ளிக்கிழமை சித்திரை ஹோரை என்பது சுக்கிரனுக்கும் மகாலட்சுமிக்கும் உகந்த நேரமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் அம்பாளின் அனுக்கிரகமும் நமக்கு சேர்ந்து கிடைக்கும் என்று சொல்லுவார்கள். அதிலும் இந்த ஆடி வெள்ளியில் அம்மன் கோவிலுக்கு சரியாக சுக்கிர ஹோரை நேரத்தில் சென்று வழிபாடு செய்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு.

சரி, வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை எந்தெந்த நேரத்தில் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா? வெள்ளிக்கிழமை காலை 6 to 7, மதியம் 1 to 2, இரவு 8 to 9. காலையில் நீங்கள் அம்பாளை தரிசனம் செய்வதாக இருந்தால் ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் அந்த இடைப்பட்ட நேரத்தில் அம்மன் கோவிலில் இருந்து, அம்மனுக்கு விளக்கு ஏற்றி, அம்மன் முன்பாக நின்று அம்மனை மனதார வேண்டி, இரண்டு கண்கள் நிரம்ப அம்பாளை தரிசனம் செய்து, உங்களுடைய வேண்டுதலை வைத்துப் பாருங்கள். எல்லா கஷ்டங்களும் தீரும்.
குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இந்த சுக்கிர ஓரை அம்மன் வழிபாடு ரொம்ப ரொம்ப சிறப்பு. இந்த ஆடி மாதம் ஒரு வெள்ளிக்கிழமையை கூட தவறவிடாதிங்க. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவிலுக்கு இந்த சுக்கிர ஹோரையில் சென்று விளக்கு போட்டு வேண்டுதலை வைத்தால் இந்த ஆடி மாதம் முடிவதற்குள் உங்கள் பண பிரச்சனைக்கு ஒரு முடிவினை கட்டி விடலாம்.

அதுமட்டுமில்லாமல் அம்பாளுக்கு வாசனை மிகுந்த பூக்கள், வேப்பிலை மாலை கட்டி போடுவது, எலுமிச்ச மாலை கட்டி போடுவது, அல்லது விரலி மஞ்சள் மாலை கட்டி போடுவது போன்ற உங்களால் முடிந்த பிரார்த்தனையை செய்து கொண்டு உங்களுடைய பணப் பிரச்சனை தீர்ந்தவுடன் அந்த வேண்டுதலை நிறைவேற்றி வைப்பது நம்முடைய மனதிற்கு முழு நிறைவான திருப்தியை கொடுக்கும்.
நிறைய பேருக்கு நிறைய கடன் தொல்லை. அடுத்தடுத்த வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியாத கஷ்டம் இருக்கிறது. எவ்வளவு பெரிய பெரிய பண பிரச்சனைகளுக்கு கூட சுலபமான ஒரு தீர்வை அந்த அம்பாள் உங்களுக்கு காட்டி கொடுத்து விடுவாள்.