தமிழகத்தில் நாகப்பட்டினம் பகுதியில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறை வரை பயணிகள் கப்பலை இயக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த சேவையை துவங்க கடந்த ஆண்டு ஏற்பாடு நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புயல், வானியல் இடர்பாடுகளால் கப்பல் போக்குவரத்து சேவை தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டது.
அதன் பிறகு இந்த சேவையை மீண்டும் துவங்க பல்வேறு விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் சில காலத்துக்கு பிறகு இந்த சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் வரும் 16ம் தேதி முதல் இலங்கையில் இருந்து நாகப்பட்டினம் பகுதிக்கு கப்பல் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை சிவகங்கை கப்பலை பயன்படுத்த முடிவு செய்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்தியா – இலங்கை இடையே திட்டமிட்டபடி வரும 16ம் தேதி பயணிகள் கப்பல போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது. அனைத்து ஏற்பாடுகளுடன் நாகையில் தயார் நிலையில் சிவகங்கை கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை கப்பலானது நாகையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு பகல் 2 மணிக்கு இலங்கை சென்றடைகிறது.
18ம் தேதி முதல் காலை 8 மணிக்கு நாகையிலிருந்து சிவகங்கை கப்பல் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமாக்கத்தில் இலங்கையில் இருந்து பகல் 2 மணிக்கு நாகைக்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் மொத்தம் 133 இருக்கைகள் சாதாரண வகுப்பில் அமைக்கப்பட்டுள்ளன. கப்பலின் கீழ்தள இருக்கை ரூ. 5000, மேல்தள சிறப்பு வகுப்பு ரூ. 7500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய-இலங்கை கப்பல் சேவையால் இருநாட்டு நல்லுறவு, வர்த்தகம் மேம்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.