இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளது. ஆசிய விளையாட்டில் இதுவரை எந்த இந்தியரும் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்றதில்லை என்ற மோசமான சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. 2018 பதிப்பில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றத தான் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் சிறந்த முடிவாக இருந்தது.
இந்நிலையில், அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக உலக நம்பர் 1 ஜோடியாக மகுடம் சூடவுள்ள சாத்விக் மற்றும் சிராக் ஜோடி, தென்கொரியாவின் சோய் சோல்கியு மற்றும் கிம் வோன்ஹோ ஆகியோரை வீழ்த்தி பேட்மிண்டனில் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. சாத்விக் மற்றும் சிராக் ஜோடி 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.