இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில்.... முதல் சோதனை ஓட்டம் டிசம்பரில்...

வந்தே பாரத், புல்லட் ரெயில் வரிசையில் மற்றொரு புதுமையாக ஹைட்ரஜன் ரெயில் இந்தியரெயில்வேயை அலங்கரிக்க இருக்கிறது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலின் சோதனைஓட்டம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. டீசல், மின்சாரத்தில் இயங்கும் ரெயில்களுக்குமாற்றாக இது இருக்கும். 2030-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நிலையை ஏற்படுத்தவேண்டும் என்ற இலக்கின் ஒரு அங்கமாக இந்த ரெயில் சேவையும் அமையும்.

இந்த ஹைட்ரஜன் ரெயிலின் சோதனை ஓட்டம் அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த்சோனிபட்வழித்தடத்தில் 90 கிலோமீட்டர் தூரம் நடைபெறும். இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுரெயில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் டார்ஜிலிங் இமாலயன் ரெயில்வே, நீலகிரி மலை ரெயில், கல்காசிம்லா ரெயில் மற்றும் இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பாரம்பரிய மலைரெயில் பாதைகளில் இயக்குவதற்கு பரிசீலிக்கப்படும்.

இந்த ரெயில் இயங்குவதற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தண்ணீர்தான்முதன்மை மூலப்பொருளாக இருக்கும். அதில் இடம்பெற்றிருக்கும்ஹைட்ரஜன் எரிபொருள்செல்கள்என்னும் நுட்பத்தை பயன்படுத்தி ரெயில் இயங்குவதற்கு தேவையான மின்சாரம்உற்பத்தி செய்யப்படும்.

அதாவது நீராவி மற்றும் நீர் இவை ஆக்சிஜனுடன் எதிர்வினை புரிந்து மின்சாரத்தை உருவாக்கும். இதன் விளைவாக தீங்கு விளைவிக்கும் உமிழ்கள் எதுவும் நிகழாது.

கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகியவை வெளியாகி சுற்றுச்சூழலுக்கு மாசுஏற்படுவதும் தவிர்க்கப்படும். அதன் மூலம் கார்பன் உமிழ்வை குறைத்து டீசல் என்ஜின்களால்ஏற்படும் காற்று மாசுபாடு தவிர்க்கப்படும் என்றும் இந்திய ரெயில்வே கருதுகிறது.

இந்த ரெயில் சுற்றுச்சூழலுடன் நட்பு பாராட்டும் அம்சங்களையே பிரத்யேகமாக கொண்டிருக்கும். டீசலில் இயங்கும் என்ஜின்களை விட 60 சதவீதம் குறைவான சத்தமே வெளிப்படும். இந்த ரெயில்அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ. வேகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது விரைவான, வசதியான பயண அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கும். ஒருமுறை ஹைட்ரஜன்எரிபொருள் நிரப்பப்பட்டால் இந்த ரெயில் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும். எதிர்காலத்தில் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் இதன் செயல்பாடு அமையும்.

2025-ம் ஆண்டுக்குள் 35 ஹைட்ரஜன் ரெயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரெயில்கள் பாரம்பரிய டீசல் ரெயில்களுக்கு இணையாகசுற்றுச்சூழலுக்கு பாதுகாவலனாக இயங்கும்.

பூஜ்ஜிய உமிழ்வு, குறைவான சத்தம் மற்றும் அதிக வேகம் என இந்த ஹைட்ரஜன் ரெயில், பயணத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரெயிலில் ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள், ஆக்சிஜனுடன் ரசாயன எதிர்வினை மூலம்ஹைட்ரஜன் வாயுவை மின்சாரமாக மாற்றும். அந்த மின்சாரம் ரெயிலின் மோட்டார்களை இயக்கும். அதே நேரத்தில் எதிர்வினை புரிவதற்கு தேவைப்படுபவை நீர் மற்றும் நீராவி மட்டுமே.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ரெயிலுக்கு தேவையான ரசாயன செயல்முறைகளுக்கு சுமார் 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதற்கேற்ப ரெயில் இயக்கத்திற்கு தேவையான பிரத்யேகநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படும். பிரத்யேக எரிபொருள் நிரப்பும் நிலையங்களும்ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு ஹைட்ரஜன் ரெயில் உருவாக்கத்திற்கும் 80 கோடி ரூபாய்செலவாகும்.