இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் அடுத்த அதிரடி!

இந்தியா ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர் விகிதம் 20 ஆண்டுகளுக்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாரயண மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்தியா தனது சிறந்த எதிர்காலத்துக்காக ஆண்டுதோறும் 1 பில்லியன் டாலர் விகிதம் 20 ஆண்டுகளுக்கு முதல்நிலை மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்ச்சி அளிக்க வேண்டும் என்று நாரயணமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.

இந்தியா மட்டுமல்லாது உலகில் உள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களுக்கு ஆண்டுதோறும் 6 பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மோடி அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய கல்வி கொள்கை திட்டத்தின் பலனை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கை திட்டத்தை செயல்படுத்த அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் இருந்து 10,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் உதவியுடன் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள ஆசிரியர்களை பயிற்சிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை போல வளர்ச்சியடைய, இந்தியா 4 முக்கிய நிலையை அடைய வேண்டும் என்றார். அதன்படி முதல் நிலையில் இருக்கும் நாடுகள் எந்த ஒரு பொருளையும் உருவாக்காது என்றார். இரண்டாம் நிலையில் இருக்கும் நாடுகள் பொருட்களை உருவாக்க தொடங்கும் என்றும் மூன்றாம் நிலையில் இருக்கும் நாடுகள் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் நான்கம் நிலையில் இருக்கும் நாடுகள் புதிய பொருட்கள் மற்றும் சேவையை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இதன்படி மாசு கட்டுப்பாடு, போக்குவரத்து கட்டுப்பாடு, சுகாதாரமான குடிநீர் உள்ளிட்டவற்றில் இந்தியா முதல் நிலையில் இருப்பதாக தெரித்தார். மேலும் முதல் நிலையில் இருக்கும் இந்தியா நான்காம் நிலைக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.