உலகின் முன்னனி எலக்ட்ரானிக் நிறுவனங்களில் ஒன்றான நாய்ஸ் இயர் போன், கண் கண்ணாடி, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் அதற்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் முதல் முறையாக ஸ்மார்ட் மோதிரம் ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
லூனா என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் மோதிரம் பயனாளரின் இதய துடிப்பு, உடல் வெப்பம் மற்றும் உடலில் எவ்வளவு ஆக்சிஜன் உள்ளது என்பதை எல்லாம் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 7 அளவுகளில், சன்லிட் கோல்டு, ரோஸ் கோல்டு, கோல்டு, ஸ்டார் டஸ்ட் சில்வர், லூனர் பிளாக் மற்றும் மிட்நைட் பிளாக் உட்பட 5 வண்ணங்களில் வெளியாக உள்ளது. இதன் விலை என்ன என்பது குறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை இதுவரை வெளியிடவில்லை. ஆனால், முன்பதிவு செய்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3 மில்லி மீட்டர் அளவு கொண்ட இந்த மோதிரம் டைட்டானியம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அதி நவீன போட்டோ-பிளேதைஸ்-மோகிராபி தொழில்நுட்ப சென்சார் ஒருவரது உடலில் ஏற்பாடும் மாற்றங்களை வைத்து உடல் வெப்பம், இதய துடிப்பு உள்ளிட்டவற்றை கண்டறிகிறது. மேலும், ஒருவரது தூக்கம், உடற் செயல் தகுதி, உடல் செயல்பாடு உள்ளிட்டவற்றையும் அறிய முடியும். இந்த லூனா மோதிரம் ஐ-ஓஎஸ் 14, ஆண்ட்ராய்டு 6 அல்லது அதற்கு மேல் உள்ள செல்போன்களில் மட்டுமே இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.