HMT குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா G42 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய நோக்கியா போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், 50MP கேமரா, பெரிய டிஸ்பிளே எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பர்ப்பிள் மற்றும் கிரே நிறத்தில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா G42 5G ஸ்மார்ட்போன். இப்போது இந்த புதிய நோக்கியா போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். குறிப்பாக இந்த புதிய நோக்கியா 5G போனை பயனர்களே பழுதுபார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக 6.56-இன்ச் IPS LCD HD+ டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது நோக்கியா G42 5G. பின்பு 90 Hz ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த நோக்கியா G42 5G ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த நோக்கியா G42 5G ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் (OS) கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போனுக்கு இரண்டு வருட OS அப்டேட் மற்றும் மூன்று வருட செக்யுரிட்டி அப்டேட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் 4GB/6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய நோக்கியா போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ SD Card Slot ஆதரவு இதில் உள்ளது. 50MP பிரைமரி கேமரா + 2MP டெப்த் சென்சார் + 2MP மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த இந்த நோக்கியா G42 5G போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8MP கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனில் 8எம்பி செல்பி கேமராவுக்கு பதில் 13MP கேமரா இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா G42 5G ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.
இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 20 வாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5G, USB Type-C, 3.5MM ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ் எனப் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த நோக்கியா G42 5G ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய நோக்கியா போன் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும்.
6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா G42 5G போனின் விலை ரூ.16,300 ஆக உள்ளது. பின்பு இதன் 4GB RAM கொண்ட வேரியண்டின் விலையை வெளியிடவில்லை HMT குளோபல் நிறுவனம்.