ஐ.பி.எல். மினி ஏலம் : சி.எஸ்.கே. அணியில் உள்ளே யார்.?, வெளியே யார் யார்..?

16வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி 2023ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதில் களம் காணும் 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக்கொண்டன. 87 வீரர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

மொத்தம் உள்ள 87 இடங்களுக்கு இந்திய தரப்பில் 273 வீரர்களும், வெளிநாட்டைச் சேர்ந்த 132 வீரர்களும் என மொத்தம் 405 வீரர்கள் இந்த மினி ஏலத்தில் இடம் பெற்றிருந்தனர்.

ஒவ்வொரு அணிக்கும் 8 வெளிநாட்டு வீரர்களையும் சேர்த்து மொத்தம் 25 வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடம் மில்னே, சி.ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டன், டுவைன் பிராவோ, கே.பகத் வர்மா, கே.எம்.ஆசிப், என்.ஜெகதீசன், ராபின் உத்தப்பா ஆகியோரை விடுவித்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அம்பதி ராயுடு, தீபக் சாஹர், டெவோன் கான்வே, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி, எம்.எஸ்.தோனி, முகேஷ் சௌத்ரி, பிரசாந்த் சோலங்கி, ராஜ்வர்தன் ருந்திரராஜ் ஜாகர்டே, ரவிந்தராஜ் ஜாகர்டே கெய்க்வாட், சிவம் துபே, சிமர்ஜீத் சிங், சுப்ரான்ஷு சேனாபதி, துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது.

விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு பதிலாக நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2023 மினி ஏலத்தில், 31 வயதான இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கும், 27 வயதான நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கைல் ஜேமிசன் ரூ.1 கோடிககும், 19 வயதான 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பேட்ஸ்மேனான நிஷாந்த் சிந்துவை ரூ.60 லட்சத்திற்கும், 34 வயதான இந்திய அணியின் முன்னாள் கேப்டனான  அஜிங்க்யா ரஹானேவை ரூ.50 லட்சத்திற்கும், 18 வயதான 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பேட்ஸ்மேனான ஷேக் ரஷீத்தை ரூ.20 லட்சத்திற்கும், 26 வயதான ஆல் ரவுண்டர் அஜய் மண்டலை ரூ.20 லட்சத்திற்கும், 24 வயதான ஆல் ரவுண்டர் பகத் வர்மாவை ரூ.20 லட்சத்திற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.

அதேபோல், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முகேஷ் குமார் (ரூ.5.5 கோடி), ரைலி ருசௌவ் (ரூ.4.6 கோடி), மனீஷ் பாண்டே (ரூ.2.4 கோடி), ஃபில் சால்ட் (ரூ.2 கோடி), இஷாந்த் சர்மா (ரூ.50 லட்சம்) ஆகியோரையும், குஜராத் டைட்டன்ஸ் அணி ஷிவம் மாவி (ரூ.6 கோடி), ஜோஷூவா லிட்டில் (ரூ.4.4 கோடி), கேன் வில்லியம்சன் (ரூ.2 கோடி), கே.எஸ்.பரத் (ரூ.1.2 கோடி), மோஹித் சர்மா (ரூ.50 லட்சம்), ஒடின் ஸ்மித் (ரூ.50 லட்சம்), உர்வில் படேல் (ரூ.20 லட்சம்) ஆகியோரையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷகிப் அல் ஹசன் (ரூ.1.5 கோடி), டேவிட் வீஸ் (ரூ.1 கோடி), என்.ஜெகதீசன் (ரூ.90 லட்சம்), வைபவ் அரோரா (ரூ.60 லட்சம்), மன்தீப் சிங் (ரூ.50 லட்சம்), லிட்டன் தாஸ் (ரூ.50 லட்சம்), குல்வந்த் கெஜ்ரோலியா (ரூ.20 லட்சம்), சுயாஷ் சர்மா (ரூ.20 லட்சம்) ஆகியோரையும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிகோலஸ் பூரன் (ரூ.16 கோடி), டேனியல் சாம்ஸ் (ரூ.75 லட்சம்), அமித் மிஸ்ரா (ரூ.50 லட்சம்), ரொமேரியோ ஷெப்பர்ட் (ரூ.50 லட்சம்), நவீன் உல் ஹக் (ரூ.50 லட்சம்), ஜெயதேவ் உனத்கட் (ரூ.50 லட்சம்), யஷ் தாக்குர் (ரூ.45 லட்சம்), ஸ்வப்னில் சிங் (ரூ.20 லட்சம்), யுத்விர் சாரக் (ரூ.20 லட்சம்), பிரேரக் மன்கட் (ரூ.20 லட்சம்) ஆகியோரையும், மும்பை இண்டியன்ஸ் அணி கேமரூன் கிரீன் (ரூ.17.5 கோடி), ஜை ரிச்சர்ட்சன் (ரூ.1.5 கோடி), பியூஷ் சாவ்லா (ரூ.50 லட்சம்), நெஹல் வதேரா (ரூ.20 லட்சம்), ராகவ் கோயல் (ரூ.20 லட்சம்), விஷ்ணு வினோத் (ரூ.20 லட்சம்), டியுவன் யான்சென் (ரூ.20 லட்சம்), ஷம்ஸ் முலானி (ரூ.20 லட்சம்) ஆகியோரையும், பஞ்சாப் கிங்ஸ் அணி சாம் கரன் (ரூ.18.5 கோடி), சிகந்தர் ராஸா (ரூ.50 லட்சம்), ஹர்பிரீத் பாட்டியா (ரூ.40 லட்சம்), ஷிவம் சிங் (ரூ.20 லட்சம்), வித்வத் கவரப்பா (ரூ.20 லட்சம்), மோஹித் ராதி (ரூ.20 லட்சம்) ஆகியோரையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜேசன் ஹோல்டர் (ரூ.5.75 கோடி), ஆடம் ஸாம்பா (ரூ.1.5 கோடி), ஜோ ரூட் (ரூ.1 கோடி), டோனோவன் ஃபெரெய்ரா (ரூ.50 லட்சம்), கே.எம்.ஆசிஃப் (ரூ.30 லட்சம்), அப்துல் (ரூ.20 லட்சம்), ஆகாஷ் வசிஷ்ட் (ரூ.20 லட்சம்), குணால் ரத்தோர் (ரூ.20 லட்சம்), முருகன் அஸ்வின் (ரூ.20 லட்சம்) ஆகியோரையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வில் ஜாக்ஸ் (ரூ.3.2 கோடி), ரீஸ் டோப்லி (ரூ.1.9 கோடி), ராஜன் குமார் (ரூ.70 லட்சம்), அவினாஷ் சிங் (ரூ.60 லட்சம்), சோனு யாதவ் (ரூ.20 லட்சம்), ஹிமான்ஷு சர்மா (ரூ.20 லட்சம்), மனோஜ் பான்டகே (ரூ.20 லட்சம்) ஆகியோரையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹேரி புரூக் (ரூ.13.25 கோடி), மயங்க் அகர்வால் (ரூ.8.25 கோடி), ஹென்ரிக் கிளாசென் (ரூ.5.25 கோடி), விவ்ரந்த் சர்மா (ரூ.2.6 கோடி), ஆதில் ரஷீத் (ரூ.2 கோடி), மயங்க் தாகர் (ரூ.1.8 கோடி), அகீல் ஹுசைன் (ரூ.1 கோடி), மயங்க் மார்கண்டே (ரூ.50 லட்சம்), உபேந்திர சிங் யாதவ் (ரூ.25 லட்சம்), சன்வீர் சிங் (ரூ.20 லட்சம்), அன்மோல் பிரீத் சிங் (ரூ.20 லட்சம்), சமர்த் வியாஸ் (ரூ.20 லட்சம்), நிதீஷ் குமார் ரெட்டி (ரூ.20 லட்சம்) ஆகியோரையும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் டி20, 2023க்கான சி.எஸ்.கே அணி வீரர்களின் முழு பட்டியல்:
அம்பதி ராயுடு, தீபக் சாஹர், டெவோன் கான்வே, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி, எம்.எஸ்.தோனி, முகேஷ் சௌத்ரி, பிரசாந்த் ரவிந்தரா ஹங்கேர், ராஜ்கர் சோலங்கி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, சிமர்ஜீத் சிங், சுப்ரான்சு சேனாபதி, துஷார் தேஷ்பாண்டே, பகத் வர்மா, அஜய் மண்டல், கைல் ஜேமிசன், நிஷாந்த் சிந்து, ஷேக் ரஷீத், பென் ஸ்டோக்ஸ், அஜிங்க்யா ரஹானே.