தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருடைய பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாட உள்ளனர் என்பதும் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் தற்போது ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை...
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) February 24, 2023
துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்.#JayalalithaBirthday pic.twitter.com/nJAqxNyveG
#Thalaivar wishes to late Ex. CM J.Jayalalitha Madam on her birthday #PuratchiThalaivi #SuperstarRajinikanth #Superstar @rajinikanth #Rajinikanth #Rajinikanth𓃵 @AIADMKOfficial pic.twitter.com/d8fMsuaWKN
— Suresh Balaji (@surbalu) February 24, 2023