தமிழ்நாட்டில் கொசுக்களால் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. அதில் டெங்கு காய்ச்சல் ஒரு முக்கிய நோயாக இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல உயிரிழப்புகள் நேர்ந்துள்ளனர். ஆகவே மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனி வார்டு மற்றும் சிறப்பு முகாம்கள் என பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகவே, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கொசு உற்பத்தி ஆவதை தடுப்பது எப்படிஎன்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். கொசு தொல்லை அதிகமாக இருந்தால், அதற்கென்று தனியாக கொடுக்கப்பட்டுள்ள உதவி எண்களை தொடர்பு கொண்டு, புகார் வழங்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிராமம், ஊராட்சி, நகரம், வார்டு என தனி தனியாக, பிரிக்கப்பட்டு, அனைத்து இடங்களுக்கும் இதற்கான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் கொசு தொந்தரவு அதிகரித்து காணப்பட்டால், 9444340496 மற்றும் 8754448477 என்ற எண்களை தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை தெரிவிக்கலாம். 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, தங்களுடைய சந்தேகங்களுக்கும் விடை காண முடியும்.