ஜெயிலர் படத்தின் “Hukum” பாடல் வரிகள் பட்டைய கிளப்புது..!

ஜெயிலர் படத்தின் “Hukum” பாடல் வரிகள் பட்டைய கிளப்புது..!

ஜெயிலர் படத்தின் 2 வது பாடல் “Hukum” வெளியாகியுள்ளது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆக்க்ஷன் காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களை குவித்து வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கார்.அதில் தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரஃப், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜெயிலர் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
ஜூலை 6 ஆம் தேதி அனிருத் இசையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் “காவலா” வெளியாகி அனைவரின் ரிப்பீட் மோடில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் “Hukum” வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆக்க்ஷன் காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களை குவித்து வருகிறது. குறிப்பாக ‘குட்டி செவத்த எட்டி பார்த்தா, உசுற குடுக்க கோடி பேரு’, பேர பறிக்க 4 பேரு, பட்டத்த தூக்க 100 பேரு போன்ற வரிகள் ரஜினிக்காகவே வெறித்தனமாக எழுதப்பட்டுள்ளது. பாடலின் இசை போலவே வரிகளும் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=1F3hm6MfR1k&t=1s