இறைவன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் இறைவன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா, நரேன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
வில்லனாக பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் நடித்திருக்கிறார். 12 இளம் வயது பெண்களை கொடூரமாக கொல்லு ரகுல் போசை காவல் துறை அதிகாரி ஜெயம் ரவி பிடிப்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என்பதை ட்ரைலரை பார்க்கும் போதே புரிகிறது.
போலீசாக இருந்தாலும் அர்ஜுன் கிரிமினல்களை கைது செய்து உடனே ரிலீஸ் செய்து விடுகிறார். ஆனால் சட்டத்தின் முன் தப்பித்தவர்களுக்கு தன்னுடைய பாணியில் சைக்கோ தனமாக நெத்தி பொட்டில் சுட்டு வேட்டையாடும் அர்ஜுன் கேரக்டரில் ஜெயம் ரவியை பார்ப்பதற்கே பயப்படும் அளவுக்கு இருக்கிறது.
அதிலும் இந்த ட்ரெய்லரில் அவரது குரலிலேயே, ‘கிரிமினல்ஸ் மிருகமாய் மாறி தப்பு செய்யும் போது ஆண்டவன் பார்த்துக் கொள்ளுவான் என விட்டுட்டு போகும் அளவுக்கு பொறுமை இல்லை என்று மிரட்டும் அளவுக்கு டயலாக் பேசுகிறார்.
அதே போல் வில்லனும் இளம் பெண்களை சித்திரவதை செய்து கொலை செய்யும் காட்சிகள் பார்ப்பதற்கே கொலை நடுங்கும் அளவுக்கு இருக்கிறது. நிச்சயம் இந்த படம் தனி ஒருவன் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவியின் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.