அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்முறை உதவியாளர் – I மற்றும் எழுத்தர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
யார் சேரலாம்? எப்படி சேருவது? உள்ளிட்ட தகவல்களை சொல்கிறோம்.
தொழில்முறை உதவியாளர்
சம்பளம்: ஒரு நாளுக்கு ரூ.629/- வழங்கப்படும்.
காலியிடம் : 01
கல்வி தகுதி: B.E. or B. Tech
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
கிளேரிக்கல் அசிஸ்டன்ட் – Clerical Assistant
சம்பளம்: 1 நாளுக்கு ரூ.872/- சம்பளமாக வழங்கப்படும்.
காலியிடம் : 01
கல்வி தகுதி: B.A. / B.Sc / B. Com
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவர்.
எப்படி விண்ணப்பிப்பது ?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை https://www.annauniv.edu/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
Institute for Ocean Management,
Anna University,
Chennai 600 025.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.