மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலர் பதவியில் இருந்து கமல் விலகி உள்ளார்.
சென்னையில் உள்ள, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் தி.மு.க., கூட்டணிக்காக கமல் செய்த பிரசாரத்திற்கு வரவேற்பும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
கமல் கட்சி தலைவராகவும், பொதுச் செயலராகவும் பதவி வகித்து வந்தார். பொதுச் செயலர் பதவியில் இருந்து நேற்று விலகினார். அந்த பொறுப்பில் அருணாச்சலத்தை நியமித்துள்ளார்.