அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். ‘கங்குவா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
மேலும், கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி(நடராஜ்) நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். வித்தியாசமான கதைப் பின்னணியில் சூர்யாவின் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துவருகிறது.