தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அணை கட்ட தேவையான வனப்பகுதியை கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்த 29 வனத்துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேகதாதுவில் அணை கட்ட சுமார் 13,000 ஏக்கர் நிலம் தேவைப்படும் என திட்ட வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.