‘நீயா நானா’வுக்கு போட்டியாக ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அதன் தொகுப்பாளர் இயக்குநர் கரு. பழனியப்பன் அறிவித்துள்ளார். இதுபற்றி அவரது பேஸ்புக் பதிவில், “ஜீ தமிழ் உடனான 4 வருட பயணம் இனிதே முடிவுக்கு வந்தது. சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது” என்று கூறியுள்ளார்.
@ZeeTamil உடனான நான்கு வருட" தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.!சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! .....
— கரு பழனியப்பன் (@karupalaniappan) March 7, 2023
நன்றி! @ZeeTamil @sijuprabhakaran ... pic.twitter.com/uxwQLfa66o