மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் 15 மருத்துவ காப்பீடுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, அதில் பல இலவசமாக வழங்கப்படுகின்றன.
மருத்துவ காப்பீடுத் திட்டங்கள்:
மக்களுக்கு தரமான மருத்துவச் சேவை வழங்குவதும், சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கங்களின் கடமையாகும். இந்தப் பொறுப்பின் ஒரு பகுதியாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதுடன், மருத்துவக் காப்பீடும் அளித்து வருகின்றன. மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளால் அரசு மருத்துவக் காப்பீடுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த திட்டங்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கிடைக்கவில்லை.
ஏழை அல்லது குறைந்த வருமானம் உடையவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்தத் திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு கிடைக்கும். மாதம் ரூ.100 செலுத்தி இந்தத் திட்டத்தில் சேரலாம் அல்லது முற்றிலும் இலவசமாகவும் இந்த மருத்துவ காப்பீடுகளை பெறலாம். இந்தத் திட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் உள்ள அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள்:
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ், அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் பயனாளிகள் சிகிச்சை பெறலாம்.