பன்னீர் புதரச் சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்தது. சைவ விரும்பிகளுக்கு, பாலில் இருந்து பெறப்படும் பன்னீரின் மூலம் போதுமான புரதச் சத்து கிடைக்கும். பன்னீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம். 100 கிராம் பன்னீரில் 12.4 கிராம் கார்போஹைட்ரேட் சத்து இருக்கும். பன்னீரில் கால்சியம் சத்தும் அதிகம் என்பதால் அதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. பன்னீரில் பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சத்துகளும் இருக்கின்றன.
ஆனால் இன்று “போலி பன்னீர்” தயாரிப்புகள் உணவு சந்தையில் ஊடுருவி வருகின்றன, இந்த தரக்குறைவான பொருட்கள், சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏப்ரல் தொடக்கத்தில், நொய்டாவில் இருந்து வெளியான அறிக்கைகள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பரிசோதித்த 168 உணவுப் பொருட்களில் 47 பன்னீர் மற்றும் கோயா பொருட்கள் மாசுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழ்நிலைகளில், போலி மற்றும் உண்மையான பன்னீரை எவ்வாறு கண்டறிவது? உணவியல் நிபுணர் தீபாலி ஷர்மாவின் (clinical nutritionist at the CK Birla Hospital, Delhi) கூற்றுப்படி, அதன் தோற்றத்தையும் அமைப்பையும் ஆய்வு செய்வதன் மூலம் நீங்கள் தொடங்கலாம்.
அமைப்பு
உண்மையான பன்னீர் மென்மையாகவும், எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்க வேண்டும், அதேசமயம் செயற்கை பன்னீர் பெரும்பாலும் ரப்பர் போன்று அல்லது அதிக மிருதுவாகத் தோன்றும்.
வாசனை
பன்னீரை முகர்ந்து பாருங்கள். உண்மையான பன்னீரில் லேசான பால் போன்ற நறுமணம் இருக்கும், அதே சமயம் போலி பன்னீரில் இது இல்லாமல் இருக்கலாம் அல்லது ரசாயன வாசனையை வெளியிடலாம்.
சுவை
சுவை நம்பகத்தன்மையையும் குறிக்கலாம்; உண்மையான பன்னீர் சுத்தமான, பால் போன்ற சுவையைக் கொண்டுள்ளது, அதே சமயம் போலி பன்னீர் செயற்கையாகச் சுவைக்கலாம்.
மாய்ஸ்சர்
உண்மையான பன்னீர் பொதுவாக அதிக ஈரப்பதம் கொண்டது, அழுத்தும் போது மோர் வெளியிடுகிறது, அதேசமயம் செயற்கை பன்னீர் உலர்ந்ததாக இருக்கும்.
சமையல் செயல்முறை
சமைக்கும் போது, உண்மையான பன்னீர் பழுப்பு நிறமாகி அதன் வடிவத்தை அப்படியே வைத்திருக்கிறது, அதே சமயம் போலி பன்னீர் ரப்பராக மாறலாம், உருகலாம் அல்லது சிதைந்துவிடும். இறுதியாக, நீங்கள் நம்பகமான ஆதாரங்கள் அல்லது புகழ்பெற்ற பிராண்டுகளில் இருந்து பன்னீரை வாங்குவதை உறுதிசெய்து, செயற்கை தயாரிப்புகளைத் தவிர்க்க, பேக்கேஜிங்கில் தரச் சான்றிதழ்கள் அல்லது பாதுகாப்பு அடையாளங்களைச் சரிபார்க்கவும், என்று சர்மா மேலும் கூறினார்.
போலி பன்னீர் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்ன?
செயற்கை பன்னீரை உட்கொள்வதால் வயிற்று உபாதை, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும்.
நீண்ட கால நுகர்வு உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களையும் பாதிக்கலாம், ஏனெனில் செயற்கை பன்னீரில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மற்றும் பால் பவுடர் இருக்கலாம், இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஷர்மா மேலும் கூறினார்.
எனவே, செயற்கை பன்னீரைத் தவிர்த்து, முடிந்தவரை புதிய, இயற்கையான பன்னீரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. நீங்கள் அதை வீட்டில் கூட செய்ய ஆரம்பிக்கலாம்.