பெங்களூர் : IPL தொடரில் சென்னை, மும்பை அணிகளுக்கு பிறகு அதிக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட அணி என்றால் அது Royal Challengers பெங்களூர் அணி தான். EE SALA CUP NAMDE என்று அடைமொழியை வைத்திருக்கும் RCB அணி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.
கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடி Play Off சுற்று வரை RCB அணி சென்றது. எனினும் முக்கிய கட்டத்தில் சொதப்பி வெற்றி வாய்ப்பை இழப்பதை வாடிக்கையாகவே RCB வீரர்கள் வைத்து இருக்கிறார்கள்.
மேலும் அதிர்ச்சி இந்த நிலையில் RCB அணியில் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ் ஹேசல்வுட் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது. இதைப் போன்று அதிரடி வீரர் மேக்ஸ்வெல் காயமும் இன்னும் குணமாகவில்லை. இதனால் என்ன செய்வது என்று தயக்கத்தில் இருந்த RCB அணிக்கு தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி வந்து இறங்கி இருக்கிறது.
காயம் கடந்த சீசனில் RCB அணியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த ரஜத் பட்டிதார் காயம் காரணமாக இந்த தொடரில் பாதி வரை பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் RCB அணி கலக்கத்தில் இருக்கிறது. ஏற்கனவே நடு வரிசையில் எந்த அனுபவ வீரர்களும் இல்லாமல் RCB அணி உள்ளது. தற்போது ரஜத் பட்டிதாரும் இல்லை என்றால் RCB அணி தங்களுடைய யுத்தியை முற்றிலுமாக மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
யுத்தியில் மாற்றம்? RCB அணியின் தொடக்க ஜோடியாக டுப்ளிசிஸும், விராட் கோலியும் இருந்து வந்தனர். தற்போது நடு வரிசையில் ஆள் இல்லை என்பதால் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். டுபிளசிஸ்க்கு தொடக்க வீரராக பின் ஆலன் என்ற நியூஸிலாந்து வீரர் சேர்க்கப்பட்டால் மூன்றாவது வெளிநாட்டு வீரராக டேவிட் வில்லி மற்றும் நான்காவது வெளிநாட்டு வீரர்களாக ஹசரங்காவை பயன்படுத்தக்கூடிய நிலை வரும்.
சிக்கல் இதனால் நடு வரிசையில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் என இரண்டு அனுபவங்கள் நிறைந்த வீரர்கள் மட்டுமே இருப்பார்கள். அதேபோல் டுப்ளிஸ்க்கு தொடக்க வீரரான பின் ஆலனும் சரி வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் தொடர் தொடங்குவதற்கு முன்பே RCB அணிக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டு இருப்பது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.