Kolkata Team Secures Historic Victory for the 6th Time!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஜேக் பிரேசர் ஆகியோர் களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான மெக்கர்க் இந்த முறை ஏமாற்றம் அளித்தார். அவர் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் அபிஷேக் போரல் 18 ரன்களிலும், ஷாய் ஹோப் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிறிது நேரம் நிலைத்து விளையாடிய பண்ட் 27 ரன்களிலும், அக்சர் படேல் 15 ரன்களிலும், ஸ்டப்ஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதி கட்டத்தில் குல்தீப் யாதவ் ஒரளவு சமாளித்து அணி கௌரமான நிலையை எட்ட உதவினார். அவர் 26 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார். டெல்லி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக விக்கெட்டுகள் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே டெல்லி அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இதில் அதிரடியாக ஆடிய சால்ட் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் 15 ரன் எடுத்த நிலையில் சுனில் நரேன் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களம் இறங்கிய ரிங்கு சிங் 11 ரன்னிலும், அரைசதம் அடித்து அசத்திய சால்ட் 68 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் கொல்கத்தா தனது 6வது வெற்றியை பதிவு செய்தது.கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சால்ட் 68 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.