எங்கெல்லாம் ஈரமான இடமுள்ளதோ, அங்கெல்லாம் நிறைந்து கிடக்கும் கீழாநெல்லியின் மருத்துவ குணம் என்னென்ன தெரியுமா?
கீழாநெல்லி பவுடர் சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா?
கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் C, இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. மஞ்சள் காமாலையை விரட்டுவதில் முக்கிய இடத்தை இன்றுவரை பிடித்துள்ளது இந்த கீழநெல்லி கீரைகள்.
மஞ்சள் காமாலை: இந்த இலையை சுத்தம் செய்து, விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். இதில் சிறிது எலுமிச்சம் சாறு, மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். அத்துடன், ஹெப்படைட்டிஸ் B, C, போன்றவற்றால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்தும் விடுபட முடியும்.
தொற்று நோய்களை முறிக்கக்கூடியது இந்த கீழாநெல்லி.. உடல் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யக்கூடியது இந்த இலை.. கீழாநெல்லி இலையை கசக்கி, அதில் 2 டம்ளர் தண்ணீரில் ஊற்றி பாதியாக சுண்ட காய்ச்சி வடிகட்டி குடித்தாலே பெண்களுக்கு தொந்தரவு தரும் வெள்ளைபடுதல் குணமாகும்.
சிறுநீரக கற்கள்: கீழாநெல்லியில் 3 பங்கு தண்ணீர் சேர்த்து, 1 பங்கு நீராக சுண்ட காய்ச்சி குடித்து வந்தால், சிறுநீரக கற்களும் உடைந்து வெளியேறிவிடும். இந்த கீழாநெல்லி கீரையை அரைத்து காயங்கள் மீது வைத்து கட்டினால் விரைவில் நிவாரணம் பெறலாம்..
தலைமுடி கொட்டுவது அதிகமாக இருந்தாலம், கீழாநெல்லி அதனை சரி செய்கிறது. இந்த கீரையை விழுதாக அரைத்து, தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் முடி உதிர்தல் உடனே நின்றுவிடும். சரும வியாதிகள் இருந்தாலும், கீழாநெல்லி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவி ஊறவைத்து குளித்தால் சரும பிரச்சனைகள் நீங்கும்.
உள்ளுறுப்புகள்: மனிதனின் அத்தனை உள்ளுறுப்புகளை பத்திரப்படுத்தவும், பாதுகாக்கவும் பேருதவி புரிந்து கொண்டிருக்கிறது இந்த கீழ்க்காய் நெல்லி என்ற கீழாநெல்லி.
கீழாநெல்லி பொடி என்றே கடைகளில் விற்கிறார்கள்.. இந்த பொடி ஒன்று இருந்தாலே பலவித உடல் கோளாறுகளை தீர்த்துவிடும்.. குறிப்பாக, கீழா நெல்லி பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து, சிறிது சீரகத்தூள், தேன் சேர்த்து குடித்தால் மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக அமையும். வயிற்றுப்புண்ணும் ஆறும்.. உடலிலுள்ள உஷ்ணத்தையும் நீக்கிவிடும்.
ரத்த சர்க்கரை: அதேபோல, உணவுக்கு பிறகு 3 வேளையும் கீழாநெல்லி பவுடரை அரைடீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.. எனினும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பவர்கள், டாக்டரின் அட்வைஸ்கள் இல்லாமல் இதை உட்கொள்ளக் கூடாது..
சிறுநீரகத்தொற்று இருப்பவர்களுக்கு இந்த கீழாநெல்லி பொடிகள் கை கொடுத்து உதவுகின்றன.. சிறுநீர் பாதை எரிச்சல், சிறுநீர் கடுப்பு, போன்றவை இருப்பின், ஒரு டம்ளர் மோரில், ஒரே ஒரு டீஸ்பூன் கீழாநெல்லி பவுடரை கலந்து, லேசாக உப்பு சேர்த்து குடித்தால் போதும்.. சிறுநீர் தாராளமாக பிரியும்.
எதிர்ப்பு: உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மாதம் இருமுறை கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி இரண்டையும் சரிசமமாக கலந்து அரை டீஸ்பூன் அளவு எடுத்துகொள்ளவும். வளரும் குழந்தைகளுக்கு தேனில் கலந்து குழைத்து கொடுக்கலாம். பெரியவர்கள் இதை வெதுவெதுப்பான நீரில் குடிக்கலாம். இவை உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப்போக்கு அல்லது வெள்ளைப்போக்கு இருந்தால் இந்த கீழாநெல்லி பவுடரை பயன்படுத்தலாம். கீழாநெல்லி பவுடர் கால் ஸ்பூன், அத்திப்பட்டை பவுடர் கால் ஸ்பூன் எடுத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம். இதனால் கர்ப்பப்பை கோளாறுகளும் தீரும்..
உதிரப்போக்கு: அதாவது, உதிரப்போக்கு இருப்பவர்கள், மாதவிடாய் நாட்களில் தொடர்ந்து 5 நாட்களும், வெள்ளைப்படுதல் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து 21 நாட்களும் குடித்து வர வேண்டுமாம்.
இப்படி எத்தனையோ நன்மைகளை கீழாநெல்லி பவுடர் தந்தாலும்கூட, டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெறாமல் சாப்பிடக்கூடாது.