ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கோதுமை மற்றும் அரிசியுடன் தினையும் இனி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தயோதயா அட்டைதாரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில், 21 கிலோ அரிசி, 9 கிலோ கோதுமை, 5 கிலோ தினை ஆகியவையும் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மாதம்தோறும் அரிசி, சீனி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே ரேஷன் கடைகளில் சிறு தானியங்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த அரசாணையில், ‘ சென்னை, கோவை மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடம் இருந்து சிறு தானியங்களை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ராகி, கம்பு, திணை, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்கள் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிடப்பட்டது.
நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், அரிசிக்கு பதிலாக அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன் படி கேழ்வரகு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில், கோதுமை மற்றும் அரிசியுடன் தினையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் ரேஷன் கார்டுதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநில ரேஷன் கார்டுதாரர்களுக்குத்தான் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு தானியங்கள் வழங்கும் அறிவிப்பை நிர்வாகம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் விநியோகம் தொடங்குகிறது.
அந்தயோதயா அட்டைதாரர்களுக்கு இதுவரை 21 கிலோ அரிசி மற்றும் 14 கிலோ கோதுமை வழங்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில், 21 கிலோ அரிசி, 9 கிலோ கோதுமை, 5 கிலோ தினை ஆகியவையும் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இது தவிர குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு யூனிட்டில் 2 கிலோ கோதுமை, 3 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்த நிலையில் பிப்ரவரி மாதம் முதல் ஒரு யூனிட்டில் 1 கிலோ கோதுமை, 1 கிலோ தினை, 3 கிலோ அரிசி வழங்கப்படும். பிப்ரவரி மாதம் முதல் தினை விநியோகத்தை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் இந்த பலனைப் பெறப் போகிறார்கள்.