Low-Risk, High-Potential Returns: The Best Savings Plan for You?

பணம் சேமிப்பு, முதலீடு என யோசிக்கும் போது நாம் அனைவரும் கூறுவது, லாபமும் இருக்கனும், முதலுக்கும் மோசம் போக கூடாது என்பது தான். அப்படி ஒரு பாதுகாப்பான மற்றும் லாபம் தரக்கூடிய அட்டகாசமான அஞ்சலக சேமிப்பு திட்டம் தான் தேசிய சேமிப்பு பத்திரம் எனப்படும் National Savings Certificate (NSC).ரிஸ்க் குறைவு.. சேமிப்பு அதிகம்..: நமது அஞ்சல் அலுவலகங்கள் வழங்கும் சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமானது தேசிய சேமிப்பு பத்திரம். வரிச் சலுகையுடன் நல்ல ரிடர்னும் கிடைப்பதால் நம்பிக்கையுடன் இதில் முதலீடு செய்யலாம். அரசு அவ்வப்போது இதன் வட்டி விகிதத்தை மாற்றி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தேசிய சேமிப்பு பத்திர முதலீடுகளுக்கு ஆண்டுக்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது. யாரெல்லாம் முதலீடு செய்ய முடியும்?: இந்தியாவில் வசிக்கும் தனிநபர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். 

உங்கள் பெயரிலோ அல்லது மைனராக இருக்கும் குழந்தைகள் பெயரிலோ முதலீடு செய்யலாம். இரண்டு பேர் இணைந்து கூட்டாகவும் முதலீடு செய்ய முடியும்.ஏன் சிறந்த முதலீடு?:நிலையான வருமானம்: ஆண்டுக்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது. அதுவும் கூட்டு வட்டியாக கணக்கிடப்படுகிறது. பொதுவாக இது வங்கிகளின் நிலையான வைப்புத்தொகையை விட அதிகம்.வரிச்சலுகை: வரிச்சலுகை பெறுவதற்காக நல்ல முதலீடு திட்டங்களை தேடி கொண்டிருப்பவர்களுக்கு ஏற்றது இது. தேசிய சேமிப்பு பத்திரத்தில் செய்த முதலீடுகளை வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சியின் கீழ் சுட்டிக்காட்டி ரூ.1.5 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை பெற முடியும். ரூ.1000 இருந்தாலே முதலீடு செய்யலாம்: தேசிய சேமிப்பு பத்திரத்தின் சிறப்பே குறைந்தபட்சம் ரூ.1,000இல் இருந்து முதலீட்டை தொடங்கலாம். எனவே சாமானிய மக்களும் எளிதாக இதில் முதலீடு செய்து பலனை பெற முடியும்.முதிர்வு காலம்: தேசிய சேமிப்பு பத்திரத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது நீங்கள் முதலீடு செய்த தேதியில் இருந்து 5 ஆண்டுகள் முடிவடைந்த பின்னரே உங்களால் பணத்தை எடுக்க முடியும்.கடன் பிணையமாக காட்டலாம்: வங்கிகள் , தேசிய சேமிப்பு பத்திரத்தை பாதுகாக்கப்பட்ட கடன்களுக்கான பிணையமாக ஏற்கின்றன.முதிர்வு தொகைக்கு வரி இல்லை: 5 ஆண்டுகள் முடிவடைந்த பின்னர், மொத்த முதிர்வு தொகையும் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும். இந்த தொகைக்கு TDS எனப்படும் மூலத்தில் கழிக்கப்படும் வரி கிடையாது. அதே போல முதல் 4 ஆண்டுகளில் உங்களுக்கு கிடைக்கும் வட்டி தொகை மூலத்தொகையுடன் சேர்க்கப்படுவதால் வட்டி கிடையாது.ஆனால் 5ஆவது ஆண்டில் கிடைக்கும் வட்டி தொகை ‘income from other sources’இல் சேர்க்கப்படும்.பட்டய கிளப்பும் புதிய LIC கிரெடிட் கார்டு..! குறைந்த வட்டி, அதிரடி சலுகைகள்..! முதிர்வு காலத்திற்கு முன் திரும்ப பெற முடியுமா?: வழக்கமாக , 5 ஆண்டுகள் லாக் இன் முடிவடைவதற்குள் முதலீட்டை திரும்ப பெற இயலாது. ஒருவேளையில் முதலீடு செய்தவர் இறந்து விட்டாலோ அல்லது நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டாலோ தொகையை 5 ஆண்டுகளுக்குள் முன் எடுக்க முடியும்.5 ஆண்டுகளில் 40%க்கு மேல் லாபம்?: உதாரணத்திற்கு அருண்குமார் என்பவர் தேசிய சேமிப்பு பத்திரத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். 

இதில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள், வட்டியும் கூட்டு வட்டியாக கொள்ளப்படுகிறது. எனவே 5ஆம் ஆண்டு முடிந்த பின் அவருக்கு தற்போது கிடைக்கும் ஆண்டுக்கு 7.7 % வட்டியை கொண்டு கணக்கிட்டால் ரூ.1,44,903 கிடைக்கும். அதாவது 5 ஆண்டுகளில் 40%க்கும் மேல் லாபம் .கோடீஸ்வரராகும் வாய்ப்பு.. கூட்டு வட்டி வருமானம் பற்றி தெரியுமா உங்களுக்கு..? எப்படி முதலீடு செய்வது?: தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்வது மிகவும் எளிது. அருகே உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று நேரடியாக முதலீடு செய்யலாம். இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசிய சேமிப்பு பத்திரம் கிடைக்கும்.இதற்கான விண்ணப்பத்தை பெற்று உங்களின் அடிப்படை தகவல்கள், சேமிக்க இருக்கும் தொகை, முதிர்வு காலம் , நாமினி ஆகிய விவரங்களை பூர்த்தி செய்யவும்.அடையாள சான்றுக்காக ஆதார், பான் கார்டு மற்றும் முகவரி சான்றுக்கான கேஒய்சி ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.2 சிறு சேமிப்பு திட்டத்திற்கு வட்டி உயர்வு.. சரியான நேரத்தில் மோடி அரசின் அறிவிப்பு வந்தது..! குறைந்தபட்சம் ரூ.1,000இல் தொடங்கி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 

உங்கள் சேமிப்பு பத்திரம் உங்கள் கையில் வழங்கப்படும். அதை பத்திரமாக வைத்து கொண்டு ஐந்தாண்டு முடிந்த உடன் கொண்டு சென்று பணத்தை பெற்று கொள்ளலாம்.ஆன்லைன் முறை: உங்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு இருந்து அதில் இண்டெர்நெட் பேங்கிங் செய்ய முடியும் என்றால் ஆன்லைனிலேயே முதலீடு செய்யலாம். லாகின் செய்து “General Services” பிரிவுக்கு சென்று “Service Requests” என்பதை கிளிக் செய்யவும். அதில் “New Requests” என்பதை டிக் செய்து, “NSC Account – Open an NSC Account (For NSC)” என்பதை தேர்வு செய்யவும். நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையை உள்ளீடு செய்து, பணம் செலுத்திய ரசீதை பதிவிறக்கம் செய்யவும்.