மஹிந்திரா நிறுவனம் சாதனை... ஒரு நிமிடத்தில் 2,937 கார்கள் முன் பதிவு...

கார் உற்பத்தி நிறுவனமான, மஹிந்திராவின் தார் ராக்ஸ், மாடல் கார், ஒரு மணி நேரத்திலேயே 1 லட்சத்து 76 ஆயிரம் கார்கள் முன்பதிவாகி சாதனை படைத்துள்ளது.

கடந்த சுதந்திர தினத்தன்றுதான் மஹிந்திரா நிறுவனம், புதிய தார் ராக்ஸ் காரை அறிமுகம் செய்தது. இது குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிய தார் ராக்ஸ் கார் விற்பனை புக்கிங் ஆர்டர் இன்று தொடங்கியது. தொடங்கி ஒரு மணி நேரத்திலேயே, (காலை 11 மணியளவில்) 1,76,218 கார்கள் புக் ஆகிவிட்டன. சராசரியாக, ஒரு நிமிடத்திற்கு 2,937 கார்கள் புக் ஆகி உள்ளது.

தசரா திருவிழாவிலிருந்து தான் நாங்கள் கார்களை டெலிவரி செய்ய உள்ளோம். ஒரு மாதத்திற்கு 9,500 முதல் 10,000 கார்கள் வரை உற்பத்தி செய்ய இருக்கிறோம். ஏற்கனவே, ஸ்கார்ப்பியோ-என் அரை மணி நேரத்தில் 1 லட்சம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்திருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், தேர்வு செய்துள்ள மாடல்களை பொறுத்து, எப்போது டெலிவரி செய்வோம் என தெரிவிப்போம். மஹிந்திரா தார் ராக்ஸ் 4 எக்ஸ் 4 வகைகளை வாங்குபவர்களுக்கு, குறிப்பாக அடர் மோச்சா பிரவுன் இன்டீரியர் ஷேடைத் தேர்வு செய்பவர்கள், தங்கள் வாகனத்தைப் பெற குறைந்தபட்சம் ஜனவரி 2025 இறுதி வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்தார்.

மஹிந்திரா நிறுவனம் தார் ராக்ஸ் காரின் விலை ₹ 13 லட்சம் முதல் ₹ 22.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயித்துள்ளது.