உங்க குடும்ப பட்ஜெட் போடுவது, இனி ரொம்ப ஈஸி...!

1. தேவைகள் (மளிகை சாமான்கள், கட்டணங்கள், வாடகை) மற்றும் விருப்பங்கள் (வெளியில் சாப்பிடுவது), ஆடம்பரங்கள், பொழுதுபோக்குக்கு செலவிடுவது) இரண்டையும் தனித்தனியே பிரியுங்கள்.

2. குறுகிய கால இலக்ககள் (கடனை திருப்பிச் செலுத்துதல், விடுமுறை / பயணம்) மற்றும் நீண்டகால இலக்குகளை (புதிய வீடு, திருமணம்) நிர்ணயிங்கள்.

3. வருமானத்தில் 50% தொகையை தேவைகளுக்கு ஒதுக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்குங்கள். 30% தொகையை விருப்பங்களுக்கு, 20%ஐ சேமிப்பு அல்லது கடனுக்கும் ஒதுக்குங்கள்.

4. ஒரு எக்சல் ஸ்பிரெட்ஷீட் அல்லது பட்ஜெட் ஆப்பில் உங்கள் செலவுகளை வாராவாரம் கண்காணியுங்கள்.

5. வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை செலவுகளை ரிவ்யூ செய்து குறைகளை சரி செய்யவும்.

செய்ய வேண்டியவை:

• பட்ஜெட் போட தொடங்கும் முன், உங்களின் தற்போதைய செலவுகளை ஆய்வு செய்யுங்கள்.

• இதை இதை செய்ய வேண்டும் என்று நிதி இலக்குகளை குறிப்பிட்டு, அவற்றுக்கு முன்னுரிமைகளை நிர்ணயிங்கள்.

• தேவைகள் மற்றும் விருப்பங்களை தனித்தனியே திட்டமிடுங்கள்.

• உங்கள் விருப்பங்களுக்காக தனியே பணம் ஒதுக்குங்கள்.

• வாராவாரம் பட்ஜெட்டை கண்காணியுங்கள்.

செய்யக்கூடாதவை:

• மற்றவர்களின் பட்ஜெட்டை அப்படியே பின்பற்றாதீர்கள்.

• எதிர்பாராத செலவினங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய மறக்காதீர்.

• வாராவாரம் பட்ஜெட்டை கண்காணித்து, அதற்கேற்ப மாற்றங்கள் செய்ய மறக்க வேண்டாம்.

• நீங்கள் அளவுக்கு அதிகமாக செலவு செய்தால், பட்ஜெட்டை கைவிட முடிவு செய்யாதீர்கள்.

• ரொம்பவும் கறாரான, இறுக்கமான பட்ஜெட் போடாதீர்கள்