மணிமேகலை Vs பிரியங்கா சண்டை: பிரியங்காவை செஃப் தாமு கலாய்த்த வீடியோ வைரல்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகுவதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மறைமுகமாக கூறியிருந்த நிலையில் பிரியங்காவை செஃப் தாமு அசிங்கப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. என்ன நடந்தது என்பது பார்க்கலாம்.

நேற்று முன்தினம் மணிமேகலை வெளியிட்ட பதிவு மற்றும் வீடியோதான் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. சின்னத்திரையில் மணிமேகலைக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். தொகுப்பாளராக பலருக்கும் பரிச்சயமாக்கி இருந்தாலும் இவர் தான் செய்யும் சின்ன சின்ன விஷயங்களையும் கூட யூடியூப்பில் வெளியிட்டு ரசிகர்களிடம் நெருங்கிய நட்பில் இருக்கிறார்.

அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னை வேலை செய்ய விடாமல் ஒரு குக்காக வந்த தொகுப்பாளர் தொந்தரவு செய்கிறார் என்று ஒரு பதிவு வெளியிட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டேன் என்று கூறியிருந்தார். மணிமேகலை இந்த முடிவெடுத்ததற்கு காரணம் பிரியங்கா தான் என்று இணையத்தில் அவரை அதிகமானோர் திட்டி தீர்த்து வருகிறார்கள். மீம்ஸ்களில் கூட பிரியங்காவை பலரும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சி பார்த்தாலும் அங்கு பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் முகம் தான் தெரியும் என்று சொல்லும் அளவிற்கு எல்லா நிகழ்ச்சிகளும் இவர்கள் இருவருமே ரவுண்டு கட்டி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் தொகுப்பாளராக தான் எல்லா நிகழ்ச்சிகளிலும் இருந்தாலும் போட்டியாளராகவும் குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசனில் அறிமுகம் ஆகி இருந்தார். ஆனால் இந்த சீசனில் இவர் குக்காக வந்திருக்கிறாரா? அல்லது தொகுப்பாளராக வந்திருக்கிறாரா? என்று பல பேர் இவரை கிண்டல் செய்து வந்தனர். ரசிகர்கள் கலாய்த்து வந்தது போலவே நேற்று முன்தினம் உள்ளே நடந்த பூகம்பம் இணையத்தில் வெடித்திருக்கிறது.

அதாவது மணிமேகலை, பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் தடுக்கிறார் என்று குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த நிலையில் பிரியங்காவை செஃப் தாமு கலாய்த்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் வழக்கம் போல பிரியங்கா தன் தம்பி என்று கூப்பிடும் இர்பானுக்காக செஃப் தாமுவிடம் சண்டை போடுகிறார். அதாவது போன வாரம் என்னுடைய தம்பி அட்வான்டேஜ் டாஸ்க் வெற்றி பெற்று இருந்தான் ஆனால் அப்போ சும்மா ஏதோ அவன் உள்ள வந்துட்டான் என்பது போல பேசினீங்க. ஆனா இந்த வாரம் பழைய குக்குகள் வெற்றி பெற்றதா பெருமையா பேசுறீங்க என்று வாக்குவாதத்தில் ஈடுபட, அதற்கு செஃப் தாமு பிரியங்கா போன வாரமும் அதற்கு முந்தன வாரமும் பழைய குக்குகள் வரவில்லை.. ஆனா இன்னைக்கு நாங்க வைக்கிறது தான் சட்டம்.

இது நீங்க தொகுத்து வழங்கும் ஸ்டார் மியூசிக் ஷோ இல்ல. இது குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்று பிரியங்காவிற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். பிரியங்கா தொகுப்பாளராக எல்லா நிகழ்ச்சிகளிலும் வரும் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்பது போல இங்கு தான் ஒரு போட்டியாளர் என்பதை மறந்து நடுவர்களிடமும் கேள்வி கேட்டு கடைசியில் அசிங்கப்பட்டு இருக்கிறார். இதை இப்போது இணையத்தில் பல ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Chef Damu says “This is not Start Music, it is Cook with Comali, naanga vachathu thaan sattam”

Is is not something dominating speech? #Manimegalai #CookuWithComali #CookwithComali5
pic.twitter.com/Z16iXew7Wu

— BB Mama (@SriniMama1) September 14, 2024