கொடுக்காய்ப்புளி, கோணபுளியங்காய், கொடிக்கலிக்கா என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் அதிகமாகவே உள்ளன.
கோடைக் காலங்களில் மட்டுமே இந்த கொடுக்காய் புளி கிடைக்கும். இந்த மரங்கள் பொதுவாக சாலையோரங்களில் அல்லது காடுகளில் இருக்கும். இதனால்தான் இதனை ஜங்கிள் ஜிலேபி என அழைக்கிறோம்.
ஜிலேபி என்ற பெயருக்கேற்ப இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். இது கொடி போல் இருக்கும். வெளிப்புறத்தில் பச்ச, பிங்க் நிறத்தில் இருக்கும். உள்ளே உள்ள காய் வெள்ளை நிறத்திலும் பிங்க் நிறத்திலு இருக்கும். இதில் வெள்ளையாக இருக்கும் பகுதி துவர்க்கும்.
பிங்க் நிறம்: ஆனால் பிங்க் நிறம் தித்திப்பாக இருக்கும். துவர்ப்பு இருக்காது. இந்த காய் பிளந்தது போல்தான் இருக்கும். அதன் நடுவே கருப்பு நிறத்தில் கொட்டை இருக்கும். கொடுக்காய்ப்புளியில் வைட்டமின் சி, வைட்டமின் பி1, பி2, பி3, கே, உள்ளிட்டவையும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், சோடியம், வைட்டமின் ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் உள்ளன.
கொடுக்காய்ப்புளியில் பினோல்கள், பிளாவனாய்டுகள் போன்ற சக்திவாய்ந்த பைட்டோ கெமிக்கல்கள் நிரம்பியுள்ளன. பழங்களின் பிற எத்தனாலிக், ஹெப்டகோசனோயிக், அமிலமான டெட்ராகோசனோல், ஹெக்ஸாடெக்கானோயிக் அமிலம் மற்றும் ஸ்டிக்மாஸ்டரால் ஆகியவை உள்ளன.
விதையில் கூட சத்து: இந்த காயின் விதையில் கூட சத்து இருக்கிறதாம். அதில் சபோனின்கள், கிளைகோசைடுகள், பாலி சாக்கரைடுகள், அஸ்கார்பிக் அமிலம், பார்மிக் அமிலம் போன்றவை உள்ளன. ஆரஞ்ச் பழங்களில் இந்த அஸ்கார்பிக் அமிலங்கள் இருக்கும். அது போல் எறும்புகளின் கொடுக்குகளில் பார்மிக் அமிலம் இருக்கும்.
இந்த கொடுக்காய் புளி வலி நிவாரணி, ஆன்டிபயாடிக் திறன்களை கொண்டுள்ளது. இந்த காய்கள் பச்சையாக இருக்கும் போது பச்சை நிறத்திலும் வறுக்கும் போது இளஞ்சிவப்பு நிறத்திற்கும் மாறும். இந்த காயில் புளிப்பு தன்மை இருக்கும். இந்த காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் எடை குறைப்பிறகு பயன்படுகிறது.
புற்றுநோயை விரட்டும்: கொடுக்காய் புளியின் இலைகளில் சைட்டோடாக்ஸிக் மற்றும் புற்றுநோயை தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளன. இந்த இலைகளில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு காரணிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போப்டொசிஸ் செயல்முறையின் மூலம் மார்பக புற்றுநோய் செல்களை மட்டுமே குறைக்க உதவுகிறது.
பழங்காலம் முதலே குடல் பிரச்சினைகளுக்கு இந்த காய் பயன்படுத்தப்படுகிறது. இதில் குடல்களுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறப்படும் ஈகோலி , சிக்கலா போன்ற நோய்க் கிருமிகளை தடுக்கும் பண்புகள் உள்ளன. இந்த காயில் உள்ள ஓலியனோலிக் அமிலமானது உடலின் செயல்பாடுகளை பராமரிக்க உதவுகிறது.
தோல் நோய்க்கு அருமருந்து: சருமத்தில் ஏற்படும் தோல் அழற்சி, வீக்கம், அரிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாத்து வரும். இதில் வைட்டமின் சி உள்ளதால் கெட்ட பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படுகிறது. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொடுக்காய் புளி நீரிழிவு நோயை சரி செய்ய உதவுகிறது. நமது உடலில் உள் கொழுப்பை குறைத்து குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த காய் கல்லீரலில் உள்ள அனைத்து நச்சுகளையும் வெளியேற்றும். கல்லீரல் காயங்களையும் குணப்படுத்தும். அத்துடன் எலும்பு மற்றும் தசைகளுக்கு உதவும். இதன் இலைகள் தசை வலியையும் தசையின் விறைப்பையும் எளிதாக்க உதவுகிறது. கொடுக்காய் புளி காசநோய்க்கு அருமருந்து. நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
காசநோய்க்கு சிறந்தது: இந்த காயின் பட்டை மற்றும் இலைகளில் உள்ள மைக்கோபாக்டீரியம் காசநோய் வளர்ச்சியைத் தடுக்கவும் ஆரம்ப சிகிச்சைக்கும் உதவுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் பி இந்த காயில் அதிகமாகவே உள்ளது. பொதுவாக சிறிய காய்ச்சலில் இருந்து கூட நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்திதான் உதவுகிறது.
கொடுக்காய் புளியின் இலைகள், விதைகள், பழங்கள் காய்ச்சலுக்கு காரணமான ஈடிஸ் மற்றும் குலெக்ஸ் போன்ற கொசுக்களின் லார்வாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயத்தில் கொழுப்பை சேர விடாமல் பாதுகாக்கிறது.