தேசிய மாணவர் படையின் ஜூனியர் ஏர் விங் பிரிவில் சிறந்த வீரருக்கான விருதினையும், தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ள, சென்னை – எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் பயிலும் மாணவர் அகிலேஷ் பி.கல்யாணுக்கு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உணவு அருந்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், ஜூனியர் ஏர் விங் பிரிவில் சிறந்து செயல்பட்டமைக்காக இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் அகிலேஷ் பி.கல்யாண், டெல்லியில் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழக என்.சி.சி. பிரிவின் பிரதிநிதியாக பங்கேற்க உள்ளதால் அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.