தாயார் ஹீராபென் உடலை தோளில் சுமந்து சென்ற பிரதமர்!

குஜராத் : உடல்நலக்குறைவு காரணமாக அஹமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் சிகிச்சை பலனின்றி இன்று (30.12.2022) அதிகாலை 3:30 மணிக்கு காலமானார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் இருக்கிறது” எனத் தன்னுடைய தாய்க்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து காந்தி நகரில் உள்ள ஹீராபென்னின் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரின் உடலை, பிரதமர் நரேந்திர மோடி தன் தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றினார்.

அதைத்தொடந்து, அவரது இல்லத்தில் இறுதி மரியாதை செய்யப்பட்ட பிறகு, குஜராத்தின் காந்தி நகரில் உள்ள தகன மையத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.