மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி24 விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் முதலில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டூயல் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜ24 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் டிப்ஸ்டர் இவான் பிளாஸ் (tipster Evan Blass) மோட்டோ ஜி24 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்போது மோட்டோ ஜ24 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். மோட்டோ ஜ24 அம்சங்கள் (Moto G24 Specifications): 6.56-இன்ச் ஐபிஎஸ் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி24 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.. மேலும் 1612 x 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 90 டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் (dynamic refresh rate), 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஒசி (MediaTek Helio G85 SoC) சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி24 ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டு இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த மோட்டோ ஜி24 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி24 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் க்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
இந்த மோட்டோ ஜி24 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி (5000mAh battery) வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் 20W fast charging) ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
புளூடூத் 5.0 ( Bluetooth 5.0), வைஃபை 5 (Wi-Fi 5), ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி24 ஸ்மார்ட்போன். மேலும் இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் எடை 180 கிராம் ஆகும்.