‘நாளைய திறன்’ பயிற்சி திட்டம் விரைவில் அறிமுகம்…

‘நாளைய திறன்’ பயிற்சி திட்டம் விரைவில் அறிமுகம்…

நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ்., அரசு முதன்மை செயலாளர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை

அண்மையில் ‘நாஸ்காம்’ என்ற தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கம் சார்பில், ‘நாஸ்காம் பணியின் எதிர்காலம் 2022’ என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் நீரஜ் மிட்டல், கொரோனா நோய் பரவலால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்பை இழந்த 2 கோடி பேருக்கு மீண்டும் வேலை கிடைப்பதில் சிக்கலாக உள்ளதாகவும்.. திறன் மேம்படுத்துதல், திறன் வளர்த்தல் ஆகியவை வாயிலாக வேலை வாய்ப்புகளை அதிகம் உருவாக்கப்பட வேண்டியதிருப்பதாகவும்.. இதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தவர், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘நாளைய திறன்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவிருப்பதாகவும்.. இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் 50 ஆயிரம் பேருக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது ஏற்படும் குளறுபடிகளை சரி செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படும் என்றும்.. ஆறாவது அல்லது ஏழாவது செமஸ்டரில் பயிற்சி அளிக்கும் இந்த திட்டம் விரைவில் துவக்கப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.